
மிர்சாபூர், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு குறித்த அதிர்ச்சியூட்டும் காட்சிப் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் 2023 அன்று பரபரப்பாக பரவியது.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் முதன்மைத் திட்டமான ‘சத்துணவுத் திட்டத்தின்’ கீழ், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியில் உள்ள வியாழக்கிழமை குழந்தைகளுக்கு வெறும் ரொட்டியும் உப்பும் உணவாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுமை நீண்ட நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. குழந்தைகளுக்கு ரொட்டி + உப்பு அல்லது சாதம் + உப்பு மட்டுமே மாறி மாறி வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்துள்ள காய்கறிகளோ, பருப்பு வகைகளோ குழந்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை.
அரசுப் பள்ளிக் குழந்தைகள் தரையில் அமர்ந்து காய்ந்த ரொட்டியை உப்பில் தொட்டு உண்ணும் இந்தக் காட்சிகள் காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது. “flagship scheme” எனப்படும் ஒரு முக்கிய அரசுத் திட்டத்தின் தற்போதைய அவலநிலையை இது வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சங்கிகள் ஒருபோதும் திருந்த மாட்டார்கள்!
