“அவர்கள் இந்திய மண்ணில் பாரமாக உள்ளனர் – அவர்கள் பங்களாதேஷ் போய் வாக்களிக்கட்டும், முஸ்லீம்களின் கடைகளில் பொருட்களை வாங்குங்கள் – கேட்ட விலையைக் கொடுக்காதீர்கள்!
ஆட்டோவில் செல்கிறீர்களா? ஓட்டுநர் முஸ்லீம் என்றால் அவர் 5 ரூபாய் கேட்டால் நீங்கள் 4 ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்.”
இதை எல்லாம் கூறியது தெருவில் போகும் சங்கி அல்ல; அசாம் மாநில முதலமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா.
ஒரு மாநில முதலமைச்சரே இவ்வளவு வன்மம் கக்குகிறார் என்றால், இவரது அதிகாரத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு எவ்வகையான நீதி கிடைக்கும்? என்று யோசிக்க முடிகிறதல்லவா? இதுதான் ‘டப்பா எஞ்சின்’ (இரட்டை எஞ்சின்) ஆட்சியின் லட்சியம்!
