திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பாலூர் பகுதியில் ஆனந்தீஸ்வரர் கோயிலில் இரவில் வழக்கம் போல பூஜையை முடித்து கோயிலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், மறுநாள் காலை பூசாரி கோயிலுக்கு வந்த போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கோயிலில் உண்டியலும் உடைக்கப்பட்டு, அதிலி ருந்து சுமார் ரூபாய் 25,000 திருட்டு போயிருந்தது. மேலும் அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலியையும், ‘மர்ம’ நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. தாலியையே காப்பாற்றிக் கொள்ள முடியாத அம்மன், இதற்குப் பெயர் கடவுள் சக்தியாம்!
இதுதான் பக்தியோ!
திருச்செந்தூர் சுப்ரமணி சாமி கோயிலில் குடியரசு நாளையொட்டி கடந்த 26 ஆம் தேதி பக்தர்கள் அதிகம் கூடினர். வரிசையில் நின்ற பெண்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுதான் பக்தியின் ஒழுக்கமோ!
தோல்விகளை மறைக்கும் முகமூடி!
குடியரசுத் தலைவர் உரை என்பது, ஒன்றிய பா.ஜ.க. அரசின் தோல்விகளை மறைக்கும் முகமூடி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
