(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்)
ஒரு ஏழைக்கு 15 லட்சம் ரூபாய் என்று மோடி அறிவிக்கவில்லையா? ஆதாரம் இதோ!
‘சொன்னதை, சொல்லவில்லை’ என்று சொல்லுபவர்களை சொத்தை மனிதர் என்று அழைக்கலாம் – இன்னொரு வகையில் கடைந்தெடுத்த கோழை என்றும் கூறலாம். வேறு ஒரு வகையில் பெரியார் மொழியில் விளக்கவேண்டும் என்றால், அறிவு நாணய மில்லாதவர் என்றும்கூடப் பெயர் சூட்டலாம். கடந்த 2014 மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளரான நரேந்திர தாமோதர தாஸ் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் ஜக் தால்பூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் (7.11.2013) என்ன பேசினார்?
“தீனதயாள் உபாத்தியாயா, வாஜ்பாய் போன்ற தலைவர்கள் தேசத்தை சீர்திருத்தப் பிறந்தவர்கள். இவர்கள் விவசாயக் குடும் பத்தில் இருந்து வந்தவர்கள். இவர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்ல; இவர் களுக்கென்று அலகாபாத் போன்ற நகரங்களில் ஆடம்பர அரண்மனை போன்ற மாளிகை இல்லை.
நாட்டின் 80 விழுக்காடு மக்கள் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் புரிபவர்கள். பஞ்சாப், அரியானா, உ.பி., பீகார் போன்ற மாநிலங்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே உள்ளன. ஆனால், இந்த விவசாயிகளின் உழைப்பை நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு வீணாக்கி விட்டது. இங்கு என்ன வளம் இல்லை; நமது வளங் களை எல்லாம் காங்கிரசார் இத்தனை ஆண்டுகளாக கொள்ளையடித்து குபேரர்களாகி விட்டார்கள்.
இவர்கள் கொள்ளையடித்த பணத்தை எல்லாம், கருப்புப் பணமாக வெளிநாடுகளில் பதுக்கி வைத்து உள்ளார்கள். இவர்கள் கொள்ளையடித்து வெளிநாட் டில் பதுக்கி வைத்த கருப்புப் பணத்தின் மதிப்பு மிகவும் அதிகம். நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாள்களில் இந்த கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன். அப்படி மீட்கும் பணத்தை இந்த நாட்டின் ஒவ்வொரு ஏழையின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன்; வெளி நாட்டில் உள்ள கருப்புப் பணத்தின் அளவு அதிகமாக உள்ளது.
இந்தக் கருப்புப் பணத்தை மீட்டாலே இந்தியாவை தங்கக் கிளியாக மாற்றி விடலாம். அதன் பிறகு இந்தியா உலகின் பொருளாதார வல்லரசாக மாறிவிடும்.
காங்கிரசாரின் ஊழல்பட்டியல் மிகவும் நீளமாக உள்ளது. 2-ஜியிலிருந்து ஆதர்ஸ் ஊழல், போபர்ஸ் பீரங்கி ஊழல், பங்கு வர்த்தக ஊழல், மாட்டுத் தீவனத் தில் ஊழல், ஸ்டாம்ப் பேப்பரில்கூட ஊழல் புரிந்துள்ள னர், இப்படி ஊழல் புரிந்து கொள்ளையடித்த பணத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? இந்திய மக்கள் தொகை யைவிட லட்சம் மடங்கு அதிகம். இதையெல்லாம் மீட்டுக் கொண்டு வரவேண்டுமென்றால், நீங்கள் எனக்கு வாக்களியுங்கள், எனக்கென்று மகன், மகள், மருமகன் இல்லை. வெளிநாட்டுக்குச் சென்று சொத்து களை பதுக்கவேண்டிய அவசியமில்லை, நான் உங்கள் உடன் பிறந்தவன், உங்களுடனேயே இருப்பவன்.”
இது யூ-டியூப்பிலும் ஒலிக்கிறது.
இவ்வளவு வெளிப்படையாக மோடி பேசிய பேச்சு ஒலிக்கும் போது ‘அய்யய்யோ – சத்தியமாக சொல்லுகி றோம். கிராமங்களில் துணியைப் போட்டுத் தாண்டுவது என்று சொல்வார்கள் அல்லவா அந்த முறையில் – மோடி அப்படிச் சொல்லவேயில்லை என்று பாஜக வைச் சேர்ந்தவர்களும், சங் பரிவாரைச் சேர்ந்தவர் களும் தொலைக்காட்சி விவாதங்களில் தொண்டைக் கிழிய கூச்சலிட்டுக் கத்துகிறார்கள்.
‘சொன்னதை, சொன்னேன்’ என்று ஒப்புக் கொள்ளும் அறிவு நாணயம் இல்லாதவர்கள் இவர்கள் என்பதற்கு வேறு என்ன எடுத்துக்காட்டுத் தேவை?
இன்னொரு வலுவான ஆதாரம் இருக்கிறது – கிடுக்கிப் பிடி போன்றது அது – தப்பவே முடியாது சாட்சிக்கு இங்கு வருபவர் நரேந்திர மோடியின் “எதிரொலி தோழர்” என்று சொல்லத்தக்கவரும், அகில இந்திய பாரதீய ஜனதா கட்சியின் மேனாள் தலைவரும் ஒன்றிய அமைச்சருமான திருவாளர் அமித்ஷா,
இதோ, அவர் பேசுகிறார் கேளுங்கள் – கேளுங்கள்!
“கருப்புப் பணம் தொடர்பாக மோடி கூறியவை அனைத்தும் தேர்தல் தந்திரம் மட்டுமே” அமித் ஷா இவ்வாறு கூறியிருப்பது ஒன்றிய அரசுக்கு நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவரிடம் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மோடி கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற் குப் பதில் கூறிய அமித் ஷா, மோடி பிரச்சாரத்தின்போது கூறியது. தேர்தல் தந்திரம் மட்டுமே என்றும், கருப்புப் பணத்தை மீட்டு வருவோம் என்பதை அவருக்கு உரிய பாணியில் மோடி குறிப்பிட்டதாகவும் விளக்கம் அளித்தார்,
கருப்புப் பணத்தை மீட்டு திட்டங்களில் முதலீடு செய்து, ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மோடி திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரம் தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப் படும் என்பதை மக்களே நம்பியிருக்க மாட்டார்கள் என்றும் அமித் ஷா தெரிவித்தார். தேர்தல் தந்திரத்திற் கும், வாக்குறுதிக்கும் வித்தியாசம் உள்ளது என்றார் அவர்,
பணம் கிடைக்காது என்று மக்களுக்கே தெரிந்திருக் கும் போது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இது புரியவில்லை என்றால் அவர் மீது பரிதாபப்படத்தான் முடியும் என்றும் அமித் ஷா கூறினார், அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சைக்கு வித்திட்ட நிலையில் பிரதமர் மோடிக்கும், ஒன்றிய அரசுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இதனிடையே கருப்புப் பண விவகாரத்தில் பொய்யான வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் துரோகம் செய்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பாஜக-வின் அரசியல் சந்தர்ப்பவாதத்தால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும் அக்கட்சி கூறி யுள்ளது.”
‘எக்னாமிக் டைம்ஸ்’, 6.2.2015
(ஆங்கிலத்தில் வெளிவந்த செய்தியும் இதே பக்கத்தில் தரப்பட்டுள்ளது.)
PM Modi’s promise of
‘Rs 15 lakh in each account’
an idiom: Amit Shah
ET Bureau Updated: Feb 06, 2015, 10:21 AM IST
Modiji’s statement was an idiomatic expression that was given during the Lok Sabha polls. Everybody knows that this black money doesn’t go to accounts of people: Amit Shah
NEW DELHI: BJP president Amit Shah has said Narendra Modi’s ‘promise’ as the party’s PM candidate that each Indian would receive Rs 15 lakh when black money would be repatriated from abroad was an ‘idiom’ and should not be taken literally. Although the ‘promise’ was never realistic, the new interpretation suggests that BJP was looking for a way to wriggle out after being accused by political opponents of reneging on its poll promise. It may also indicate the difficulty the government was facing to repatriate black money from foreign shores.
Shah’s remarks came in response to a question during an interview to a news channel. “Modiji’s statement was an idiomatic expression (jumla) that was given during the Lok Sabha polls. Everybody knows that this black money doesn’t go to accounts of people,” Shah said. During the Lok Sabha election campaign, Modi had often said if NDA comes to power it will ensure that Indian black-money invested illegally in tax havens abroad would be brought back to and this fund would be distributed to the poor, with each one getting Rs 15 lakh in their accounts.
Then BJP president Rajnath Singh had even promised to get back black-money within 100 days of coming to power. “The black money that would return to the country from abroad will be used to help the poor and the needy through schemes, Modiji had said (meant) that. If Kejriwalji doesn’t understand this then I pity him,” Shah added.
The BJP chief recalled some statements made by Aam Aadmi Party convenor Arvind Kejriwal and charged him with going back on the promises. He said “there is a difference between jumlas and promises” and alleged that Kejriwal had failed to fulfil the promises he had made.
அமித்ஷா இப்படிப் பேசியதன் பொருள் என்ன? வெளி நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து இந்தியாவில் உள்ள ஏழை மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்று மோடி சொன்னது உண்மைதான்; அதனை ‘சீரியசாக’ எடுத்துக் கொள்ளவேண் டாம். அது தேர்தலுக்காக சொல்லப்பட்ட பொய் வாக்குறுதி என்பதை ஒப்புக்கொண்டு விட்டாரா இல்லையா?
இதற்கு மேலும் பி.ஜே.பி.காரர்களோ, சங் பரிவார் வட் டாரமோ மோடி இப்படி சொல்லவேயில்லை என்று சொன்னால், இதை முகத்துக்கு நேரே எடுத்துக் காட்டி கரி பூச வேண்டாமா?
இன்னொரு தகவலும் உண்டு!
ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாநிலத்தைச் சேர்ந்த லால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். (ஆகஸ்ட் 31, 2016),
அதில், 2014 தேர்தல் பரப்புரையில் தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் கருப்புப் பணம் மீட்கப்பட்டு அனைவரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என வாக்குறுதி அளித்தார். அது எப் பொழுது நிகழும்? மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் மோடி அவர்கள், ஊழல், நாட்டிலிருந்து சுத்தமாக விரட்டியடிக்கப்படும் என்றும் கூறினார், ஆனால், தற்போது ஊழல் 90 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மோடி குறிப்பிட்டது எப்பொழுது நடக்கும்? போன்ற கேள்விகள் உள்பட பல்வேறு கேள்விகளை திரு.லால் அவர்கள் கேட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த இந்திய தகவல் ஆணை யம் 15 நாளில் மனுதாரரின் கேள்விக்குப் பதில் அளிக்கு மாறு பிரதமர் மோடி அலுவலகத்திற்கு உத்தரவிட்டது.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி விண்ணப்பம்; 5 நாள்களுக் குள் பதில் அளிக்கவேண்டும் என்று இந்திய தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்துக்கு ஆணை பிறப்பித்திருந்தது. எத்தனை 15 நாள்கள் ஓடியிருக் கின்றன – ஆனால், பதில்தான் இல்லை, என்ன பதில் சொல்ல முடியும்? ஒன்று உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். அதைத் தவிர்க்கவே இப்படி ஆறப் போடப் பட்டுள்ளது – பிரதமர் அலுவலகம் என்னும் வேலி பயிரை மேய்கிறதே!