கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.1.2026

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* திமுகவுக்கு ஆதரவாக 70-80 சதவீத பெண்கள் வாக்களிப்பார்கள், ஆய்வுகள் வெளிப்படுத்தும் கள நிலவரம்.

* “முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்; இஸ்லாமியர்களுக்கு திமுக ஆட்சி செய்த நன்மைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்

* வடகலை – தென்கலை விவகாரம்: காஞ்சி தேவராஜஸ்வாமி கோயில் பிரச்சினையில் நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் மத்தியஸ்தராக உச்சநீதிமன்றம் நியமனம்.

* அஜித் பவார் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது விமான விபத்தில் சதி ; சரத்பவாருடன் அஜித் பவார் மீண்டும் இணைய இருந்த நேரத்தில் அவர் விமான விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா. குற்றச்சாட்டு: விசாரணை நடத்த எதிர்க்கட்சிகளும் கோரிக்கை.

* குடியரசுத் தலைவர் உரையின் நடுவே, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்: வாக்காளர் சிறப்புத் திருத்தம், மகாத்மா காந்தி பெயர் நீக்கம் குறித்து விவாதம் செய்ய முனைப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்தை சந்திக்க, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா 15 பேர் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் குழு பிப்ரவரி 2 அன்று சந்திக்க முடிவு.

* ஒன்றிய அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டில் ஒரு வரலாற்றுத் தவறை சரி செய்ய ஒரு வாய்ப்பு: 1922 ஆம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களையும் “ஆதி திராவிடர்” என்ற ஒருங்கிணைந்த வரலாற்று அடையாளத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தப்பட வேண்டும், ரவிக்குமார் எம்.பி. கருத்து.

தி இந்து

* வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்தை எதிர்கொள்ளும் 88 சதவீதம் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு அறிவிக்கை அனுப்பப்படவில்லை: திமுக: சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் (SIR) போது, தர்க்க ரீதியான முரண்பாடுகள் மற்றும் வரைபடப் பிழைகள் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவிருக்கும் தமிழ்நாடு வாக்காளர்களில் சுமார் 88 சதவீதம் பேருக்கு விசாரணை அறிவிக்கைகள் கிடைக்கவில்லை என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் புகார்.

* தமிழ்நாட்டில் அதிகாரத்திற்கு வந்தால், என்டிஏ தமிழ்நாட்டின் வளர்ந்த நிலையைச் சீரழித்துவிடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.

* ஒன்றிய அரசுப் பணியாளர்களில் 66% துப்புரவுப் பணியாளர்கள் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்: ஒன்றியப் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அறிக்கை

டைம்ஸ் ஆப் இந்தியா

* சிறுபான்மையினர் இட ஒதுக்கீட்டை பெற ஒருவர் மதம் மாற முடியுமா: உச்ச நீதிமன்றம் : உயர் ஜாதி வசதியான பெற்றோருக்கு பிறந்த ஒருவர், சிறுபான்மையினர் அந்தஸ்தை கோருவதற்காக மதம் மாறி, அதன் மூலம் ஒரு சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு தகுதி பெற முடியுமா என்பதை ஆராய உச்ச நீதிமன்றம்  தாமாக முன்வந்து விசாரணை செய்ய முடிவு

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *