19.1.2026 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, தமிழறிஞரும், திராவிடர் இயக்கப் பற்றாளருமான மறைந்த முனைவர் அ.ஆறுமுகம் அவர்களின் மகன் டாக்டர் ஆ.பாவேந்தன் சந்தித்து அ.ஆறுமுகனாரின் படைப்புகளையும், இரா.இளங்குமரனார் அவர்களின் படைப்புகளையும் சேர்த்து 27 நூல்களை வழங்கினார்.
அதனை அப்படியே பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்குப் பெற்றுக் கொண்டோம்.
நூல்களை வழங்கியமைக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி!
– நூலகர்,
பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்.
