பீகார் வாலிபர் உள்பட 3 பேர் கொலை பீகாரைச் சேர்ந்த 5 பேர் கைது வதந்திகளை பரப்ப வேண்டாம்: தமிழ்நாடு அரசு

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன.29- அடையாறில் கொலை செய்யப்பட்ட பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகாரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் வடமாநிலத் தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. இதற்கு தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

வதந்தி

சென்னையில் பீகாரைச் சேர்ந்த கவுரவ்குமார் மற்றும் அவரது மனைவி. குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

உண்மை என்ன?

பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கவுரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் வடமாநிலத் தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம் அதனையொட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *