கேள்வி: தமிழ்நாட்டில் எந்தளவுக்குப் பகுத்தறிவு வளர்ந்துள்ளது?
– அ.ப.ஜெயபால், சிதம்பரம்
குமுதம் பதில்: ஒரேயோர் உதாரணம் மட்டும் சொல்கிறேன். Gross Enrollment Ratio எனப்படும் உயர்கல்வி சேர்க்கையில், அனைத்து மாநிலங் களும் 50 சதவிகிதத்தை எட்டவேண்டும் என்பது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அஜெண்டாக்களில் ஒன்று. இதில் டில்லி 46.3%, கேரளா 37%, தெலங்கானா 36.2%, ஆந்திரா 32.4%, மகாராட்டிரா 32% கருநாடகா 28% மட்டுமே எட்டியிருக்கும் நிலையில், 2019 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு 49 சதவிகிதத்தை எட்டிவிட்டது. பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு உயர்கல்வியில் சேர்வோரில் நாட்டிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. குறிப்பாக பாலின வேறுபாடு பெரிதாக இல்லாமல், தமிழ்நாட்டில் ஆண்கள் 49.8 சதவிகிதமும், பெண்கள் 48.3 சதவிகிதமும் உயர்கல்வியில் சேர்கிறார்கள். சொல்லப் போனால், நமது தேசிய GER சதவிகிதம் 28 மட்டுமே. இன்னும் சொல்லப்போனால், பஹ்ரைன் (47%), சீனா (43%), மலேசியா (45%) ஆகிய நாடுகளைவிட, தமிழ்நாட்டில்தான் உயர்கல்வியில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகம்! இதற்கெல்லாம் அடிப்படை பகுத்தறிவுதான்… போதுமா…..
– ‘குமுதம்’, கேள்வி பதில் பகுதியிலிருந்து…