செங்கல்பட்டு, நவ. 6- சென்னை பனையூரில் உள்ள தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணா மலையின்வீடு அருகே சுமார் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்குஅப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடந்த அக். 20-ஆம் தேதி நள்ளிரவு பாஜகவினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக, அங்கு கொடிக்கம்பம் நடக் கூடாது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாஜகவினருக்கும், காவல் துறையின ருக்கும் ஏற்பட்ட மோதலில் பொக்லைன் வாகன கண்ணாடி உள்ளிட்ட வற்றை பாஜகவினர் அடித்து உடைத்தனர்.
இது தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி, கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பாலவினோத் குமார்(34) உள்ளிட்ட பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் பிணை கோரி, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 5 பேரும் பிணை மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா. அனைவரது பிணை மனுவையும் தள்ளுபடி செய்து 4.11.2023 அன்று உத்தரவிட்டார்.