சிக்கலில் தவிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஜன. 28–- நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படம் தொடர்பான வழக்கை, மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்கத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

‘ஜனநாயகன்’ படம்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. பொங்கல் விழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய தணிக்கை வாரியம் இந்தப் படத்தை மறுஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரை செய்தது.

இது தொடர்பான வழக்கு, கடந்த ஜனவரி 20ஆம் தேதி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பைத் தள்ளி வைத்திருந்தனர்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு நேற்று (27.1.2026) அளித்த தீர்ப்பு வருமாறு:

“இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தணிக்கை வாரியம் பதில் அளிக்கப் போதுமான கால அவகாசம் வழங்கவில்லை. எனவே, தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் எனத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம். இப்படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் வகையிலும், ராணுவச் சின்னங்கள் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளதால், படத்தைத் தணிக்கை வாரியம் மறுஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது.

முழுமையாக விசாரிக்க உத்தரவு

அதை எதிர்த்துப் படத்தயாரிப்புக் குழு மீண்டும் புதிய மனுத் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில் கோரிக்கைகளை மாற்றம் செய்து தாக்கல் செய்ய வேண்டும். அந்த வழக்கை தனி நீதிபதி மீண்டும் முழுமையாக விசாரித்துத் தகுதியின் அடிப்படையில் தீர்ப்பளிக்க வேண்டும். அப்போது தணிக்கை வாரியம் தரப்பில் விளக்கமளிக்கத் தனி நீதிபதி போதுமான அவகாசம் அளிக்க வேண்டும்.”

இவ்வாறு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதனால் ‘ஜனநாயகன்’ படம் வெளியாவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

 

பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் தி.மு.க. தேர்தல் பிரச்சாரம்!

20 நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர பரப்புரை

சென்னை, ஜன. 28- தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தீவிர பரப்புரை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பரப்புரை பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திரப் பேச்சாளர்கள், மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிரமான பரப்புரைப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இந்த பரப்புரையின் போது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தொழில் முனைவோர் மற்றும் கல்வியாளர்கள் உட்படப் பல்வேறு தரப்பினரை ஒரே இடத்தில் அழைத்துச் சந்திப்புகள் நடத்தப்படும்.

மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நட்சத்திரப் பரப்புரை யாளர்கள் ஆகியோரின் முன்னிலையில் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும், மக்களின் கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும். இதற்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்யுமாறு மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

தூத்துக்குடியில் 890 பேருக்கு காவலர் உடல் தகுதித் தேர்வு

தூத்துக்குடி, ஜன.28- தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 890 விண்ணப்பதாரர்களுக்கு நேற்று துவங்கிய உடல் தகுதித் தேர்வு நாளை வரை நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த 9.11.2025 அன்று நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 890 விண்ணப்பதாரர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று (27.1.2026) துவங்கி 29.1.2026 வரை நடைபெற உள்ளது.

மேற்சொன்ன உடல் தகுதி தேர்வு நேற்று ஈரோடு சிறப்பு அதிரடிப்படை (Special Task Force) காவல்துறைத் தலைவர் (அய்.ஜி.) மயில்வாகனன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் மேற்பார்வையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் தேர்ச்சிபெறும் விண்ணப்பதார்கள் உடற் திறனாய்வு (Physical Efficiency Test) தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த உடற்தகுதி தேர்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணி அலுவலர்கள், காவலர்கள் ஆகியோர் உடற்தகுதி தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *