கழகத்தின் சார்பில் இரங்கல்
மும்பை, ஜன.28 மகாராட்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (வயது 66) சென்ற விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இன்று (28.1.2026) காலை 8.45 மணிக்கு பாராமதி விமான நிலையத்தில் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கித் தீப்பிடித்தது. தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியபோது விபத்து எனத் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விமான விபத்தில் மகாராட்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் அஜித் பவார் உள்பட 4 பயணிகளும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
கழகத் தலைவர் இரங்கல்
எதிர்பாராத விபத்தால் மகாராட்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித்பவாரின் மரணத்திற்கும், அவ்விபத்தில் மரணமடைந்தோருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– கி.வீரமணி,
தலைவர்
திராவிடர் கழகம்
28.1.2026
சென்னை
