கால்நடை பல்கலை. துணைவேந்தரை அரசே நியமிக்கும்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, ஏப்.21 சென்னை கால்நடைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந் தர்களை ஆளுநருக்குப் பதிலாக அரசே நியமிக்கும் வகையில் ஏற்கெனவே பேர வையில் சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந் நிலையில், மீன்வளப் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று முன் தினம்  (19.4.2023) தாக்கல் செய்தார். இதேபோல, கால்நடை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகா ரத்தை அரசுக்கு அளிப்பது தொடர்பான சட்டத்திருத்த மசோதாவை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேற்று (20.9.2023) தாக்கல் செய்தார்.

மேலும், நகராட்சி நிர்வாக துறை சார்பில், நகராட்சிகள், மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நிலங்கள், கட்டடங்கள், தொலைத்தொடர்பு கோபு ரங்கள் மற்றும் நிலத்தின்மீதுள்ள அல்லது இணைக்கப்பட்டுள்ள சேமிப்புக் கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது ஆண்டு மதிப்பில் 5 சதவீதத்துக்கு மிகாமல், மன்றத்தால் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் கல்வி வரியை நிர்ணயிக்க லாம் என்பதற்கான தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கே. என். நேரு அறிமுகம் செய்தார். 

அதேபோல, தமிழ்நாட்டில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் அறிவிப்பை இணையதளம் வாயிலாக வெளியிடப் படுவதுடன், தினசரி செய்தித்தாள்களி லும், இந்திய வர்த்தக இதழிலும் வெளியிடும் வகையில், தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவும் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர, வரும் 2025-2026-ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறையை நீக்கும் வகையில், குறிக்கப்பட்ட காலவரம்பை நீட்டிக்கவும், 2025 மார்ச் 31-ஆம் தேதிக்குள் மாநில உள்நாட்டு உற்பத்தியின் நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதம்வரை குறைக்கவும், தமிழ்நாடுநிதிநிலை நிர்வாகப் பொறுப்புடைமைச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரு மசோதாக்களையும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த மசோதாக்கள் இன்று (21.4.2023) ஆய்வு செய்யப்பட்டு, நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *