லண்டன், ஏப்.21- வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் அமைப்பு லண்டன் கிளை நடத்தும் இங்கி லாந்து இந்திய தமிழ் மக்களுடன் திமுக துணைப்பொதுச் செயலா ளர், மக்களவை உறுப்பினர் ஆ.இராசா எம்.பி. கலந்துரையா டல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி ஏப்.23 அன்று காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரை எண் 28, கார்லைவி சாலை, மேனர் பார்க் லண் டன் இ 126 பிஎன் என்ற இடத்தில் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு அ.ஜ.ஷாஜ ஹான் வழக்குரைஞர் சஹாபுதீன், வழக்குரைஞர் மாமலாஸ் பாஸ்கர் ஆகியோர் தலைமை வகிக்கின்ற னர். சத்திய நாராயணன், பிரேம் குமார், வித்யாபாரதி, முத்து செழியன், வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் முஹம்மது ஃபைசல் வரவேற்றுப் பேசுகிறார். வினோத், முஹமது அசாருதீன், பிரதாப்கிரி அப்பாவு மூர்த்தி, சத்திரமோகன், நீதி ராஜன், மனோஜ் முருகானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.
அவைத் தலைவர் ஞான முருகன் எழுதிய ஒரு மொழியின் ஓசை புத்தகம் வெளியிடப்படு கிறது. வெளிநாட்டு வாழ் தமிழர் வாழ்வில் திராவிடத்தின்
பங்க ளிப்பு என்ற தலைப்பில் தி.மு.க. அயலக அணி இணைச் செயலாளர் புகழ் சாந்தி பேசுகிறார்.
பிரிக்கும் கடல் சேர்க்கும் தமிழ் என்ற தலைப்பில் திராவிட இயக் கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றுகிறார். “தமிழ் நம் உணர்வு உலகெல்லாம் நம் உறவு” என்ற தலைப்பில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்புரையாற்றுகிறார். விழாவில் குணா முத்துசாமி நன்றி கூறுகிறார். மாலதி முத்து, மரியா டயானா ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இந்நிகழ்ச்சியை வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் யு.கே. நடத்துகிறது.