கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் மனித உடலுக்கு கடினத்தை தருவதுதான் கருப்பு உடை
எந்த பலனையும் எதிர்பாராமல், எந்த சூழ்நிலையிலும் கொள்கை ஒன்றே உறுதியாக கொண்டு உழைத்து, வெயிலையும், மழை யையும் தாங்கி கொண்டு கடமையே தமது திறமை போன்று உழைக்க வேண்டும் என்பதற்காக தான் அய்யா பெரியார் கருப்பு சட்டையை தேர்ந் தெடுத்தார். அது வெறும் உடைய ல்ல, இனத்தின் இருப்பு, உள்ளத்தின் உயிர்ப்பு,திராவிடத்தின் துடுப்பு.
கருப்பு சட்டை நீதித்துறைக்கோ சீரூடை, துக்கம், எதிர்ப்புக்கு சில நேரங்களில் பக்தர்களுக்கு காலநிலை உடை, ஆனால் பெரியார் தொண் டர்களுக்கு கருப்பு சட்டை பேருடை.
கருப்பு சட்டையின் உழைப்பு ஊதியத்திற்கு அல்ல – கொள்கை பிடிப்பிற்கு, தோழர்களின் செழிப்பு அவர்களுக்கு அல்ல – இனத்திற்கு ,என்று நொடிப் பொழுதும் –
செயல்படுவது தான் கருப்பு சட்டை.
பெருமைக்காக அல்ல – உரி மைக்காக
பெரியாரின் கொள்கை வென் றெடுக்க கருப்பு சட்டை யே எங்கள் பெருமை. கருப்பு சட்டையே எங்கள் உரிமை.
மானமிகு ஆசிரியர் கருப்பு சட்டை அணிந்து மானிடஇனத்திற்காக போராடுகிறார். ஆனால் பூணூல் அணிந்த பார்ப்பனர்களோ இன்னும் மடமைத்தனம் என்ற கயிற்றை தாங்கள் அணியும் பூணூலால் திரிக் கிறார்கள்.
சூத்திரனோ ‘மது’ என்று சொல் கிறான்
ஆனால் அந்துபோனமணி, நொந்து போன மணி பூணூல் மலர் ‘உற்சாக பானம்’ என்று சொல்லி மதுவில் மூழ்கிக் கிடக்கிறது.
ஊரை ஏமாற்றுவது பூணூல் கூட்டம்
உலகிற்கே நன்மை வேண்டி போராடுவது கருப்பு சட்டை கூட்டம்.
தெரியாது என்பான் பார்ப்பான்
தெரியும் என்பான் கருப்பு சட்டைக்காரன்
முடியாது என்பான் பார்ப்பான்
முடியும் என்பான் கருப்பு சட்டைக்காரன்
தெரியாது என்பவர் அரை முட்டாள்
முடியாது என்பவர் முழு முட்டாள்
தெரியும் என்பவர் மனிதர்
முடியும் என்பவர் அரை மனிதர்
முடிப்பவர் தான் முழு மனிதர்
அந்த முழு மனிதன் தான் கருப்பு சட்டைக்காரன்.