நாகர்கோவில்,ஏப்.21- ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் நடந்த பாவேந்தர் பாரதி தாசன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் கழக மாவட்ட துணைத் தலை வர் ச.நல்ல பெருமாள், மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவ தாணு, செயலாளர் எம். பெரியார்தாஸ், தொழி லாளரணி அமைப்பாளர் ச.ச.கருணாநிதி, திரா விடர்கழக கலை இலக்கிய அணி மாவட்ட செயலா ளர் பா.பொன்னுராசன் ஆகியோர் கருத்துரை யாற்றினர்.
மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ் அமைப்பாளர் மு.இராஜ சேகர், ச.ச. மணிமேகலை இரா.முகிலன், மா.ஆறு முகம், முத்துவைரவன் மற்றும் கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர் களின் நூல்களை பரப்பி யும் நினைவு நாளை நடத் தினர்.