சென்னை, ஜன.25 தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 20ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இரண்டாவது நாள் கூட்டத்தில் மறைந்த உறுப்பினர் களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 22, 23ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.
நேற்று (24ஆம் தேதி) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதில் அளித்து பேசினார். தொடர்ந்து 9 சட்டமுடிவுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.
எச்சரிக்கை!
கைப்பேசியில் விளையாட
பெற்றோர் கண்டிப்பு
பெற்றோர் கண்டிப்பு
சேலத்தில் 7-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலையாம்!
சேலம், ஜன.25 சேலம் அருகே கைப்பேசியில் கேம் விளையாடுவதை பெற்றோர் கண்டித்ததால், மனமு டைந்த 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகே உள்ள திருமலைகிரி தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு தீனா (11) என்ற மகன் இருந்தார். தீனா அங்குள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான்.
சிறுவன் தீனாவுக்கு கைப்பேசியில் அடிக்கடி விளையாடும் பழக்கம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று (24.1.2026) காலையும் அவன் தொடர்ந்து கைப்பேசியில் ‘கேம்’ விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனை அவனது பெற்றோர் பார்த்துவிட்டு, படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பதாகக் கண்டித்துள்ளனர்.
பெற்றோர் கண்டித்ததால் கடும் மனவேதனை அடைந்த தீனா, யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றான். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவனை மீட்டு உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த காவல்துறை யினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில்: சிறுவன் கைப்பேசி கேம் விளையாட்டிற்கு அடிமையாக இருந்ததும், அதனைக் கண்டித்த காரணத் திற்காகவே தற்கொலை செய்துகொண்டதும் உறுதி யானது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு: தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் உதவிக்கு மாநில அரசின் உதவி மய்யமான 104 அல்லது சினேகா அமைப்பின் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
