சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை!
சென்னை, ஏப். 21- சட்டப் பேரவையில் 19.4.2023 அன்று கலை, பண்பாட்டுத் துறை மானியக் கோரிக்கைக்கு பதில ளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழ் பண்பாட்டினை மீட்டெடுத்து அதனை நிலை நிறுத்தக் கூடிய முதலமைச்சரின் முயற்சிக்கு என்றும் கலை, பண்பாட்டுத் துறை துணை நிற்கும்” என்று குறிப் பிட்டார்.
கலை மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் தொல்லியல் குறித்து மானியக் கோரிக்கையின் மீது அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை வருமாறு:-
நாட்டுப்புற கலைஞர் களுக்கு நலவாழ்வு அளிக்கக் கூடிய வகையில் நாடெல்லாம் சங்கமம் கலை நிகழ்ச்சி நடத்து வதற்காக 11 கோடி ரூபாயை அறிவித்திருக்கக்கூடிய முதலமைச்சர், நம்முடைய தமிழ் பண்பாட்டினுடைய தொன்மை அடையாளங்களை மீண்டும் எடுத்து மீட்டுரு வாக்கம் செய்து, அதனை நிலை நிறுத்துவதற்காக தமிழ் நாட்டில் மேலும் 8 இடங்களில் இந்த ஆண்டு அகழ்வாய் வுகளை நாம் துவங்குவதற்கு அனுமதியினை வழங்கியிருக் கிறார்.
கீழடி – சிவகளை- மயிலாடும்பாறை!
கீழடியிலே மிகப் பெரிய ஓர் அருமையான அருங்காட்சி யத்தை உருவாக்கியிருக்கக் கூடிய முதலமைச்சர், அதனு டைய தொடர்ச்சியாக பொரு நையிலும் நம்முடைய பண் பாட்டைநிலை நிறுத்தக்கூடிய வகையில் கீழடி எப்படி தமிழ் பண்பாட்டை கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு எடுத்து சென் றதோ, சிவகளை அதனை இன்னும் மேலே, 3,800 ஆண்டு கள் பழமையாக அதனை கொண்டு சென்றது.
மயிலாடும்பாறை இரும்பினுடைய பயன் பாட்டுக் காலத்தை 4,500 ஆண்டுக்கு முன்னே எடுத்து சென்றிருக்கிறது. எனவே, நம் முடைய தமிழ் பண்பாட்டை மீட்டெடுத்து, அதனை நிலை நிறுத்தக்கூடிய முதலமைச்சர் அவர்களுடைய எல்லா முயற் சிகளுக்கும் இந்தத் துறை அவரோடு துணை நிற்கும் என்பதை மாத்திரம் எடுத்து சொல்லி, இந்தத் துறையின்மீது வெட்டுத் தீர்மானங்களை 7 பேர் கொடுத்திருக்கிறார்கள்.
நீங்கள் அளித்திருக்கக் கூடிய அந்த 7 வெட்டுத் தீர்மா னங்களை, எத்தனையோ வெட்டுத் தீர்மானங்களை யெல்லாம் விலக்கிக் கொண்டி ருக்கிறீர்கள், இது ஒரு ஏழே ஏழு. இதனையும் நீங்கள் விலக் கிக்கொண்டு இந்த மானியக் கோரிக்கையினை நீங்கள் நிறைவேற்றிதர வேண்டு மென்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக் கொள் கிறேன்.
1. தமிழ்நாட்டின் கலை வடி வங்களை அழியாமல் பாது காக்கவும், அவற்றை வளர்க் கவும் 200 அரசு கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கலைப் பயிற்சிகள் ரூ. 1.70 கோடி செலவில் வழங்கப்படும்.
2. சென்னை மற்றும் திரு வையாறு அரசு இசைக் கல்லூரிகளில் தவில் மற்றும் நாதசுரம் பிரிவுகளில் ரூ. 18 இலட்சம் செலவில் பட்டப் படிப்பு தொடங்கப்படும்.
3. சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மூன்று புதிய வகுப்பறைகள் மற்றும் நூலகம் ரூ.20.92 கோடி செலவில் கட்டப்படும்.
4. கோயம்புத்தூர் தமிழ் நாடு அரசு இசைக்கல்லூரியில் ரூ.1.97 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.
5. புதிதாக உருவாக்கப் பட்ட மாவட்டங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் 20 கூடுதல் சவகர் சிறுவர் மன்றங்கள் ரூ.58 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.
6. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திரையரங்கம் ரூ.50 இலட்சம் செலவில் நவீன முறையில் மேம்படுத்தப்படும்.
7. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் ரூ. 20 இலட்சம் செலவில் டிஜிட்டல் முறையில் ஆவணப்படுத்தி பாதுகாக் கப்படும்.
8. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் வாயிலாக கலாச்சாரப் பரிமாற்றத் திட் டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.15 இலட்சத்தி லிருந்து ரூ. 50 இலட்சமாக உயர்த்தப்படும்.
9. தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தின் நல்கைத் தொகையினை உயர்த்திடவும், அலுவலகத் திற்கான தளவாடங்கள் மற் றும் இயந்திரங்கள் கொள் முதல் செய்திடவும் ரூ. 1.09 கோடி ஒதுக்கப்படும்.
நாட்டுப்புறக் கலைஞர்களின் சமூகப் பாது காப்பினை உறுதி செய்யும் நோக்கில் அனைத்து நலத் திட் டங்களையும் தொய்வின்றி செயல்படுத்திடும் வகையில் நலத்திட்டத்திற்கான நிதி மற் றும் பணியாளர்களுக்கான ஊதியம் மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கான தொடர் ஒதுக்கீட்டு நிதியினை ரூ.35 இலட்சத்திலிருந்து ரூ. 1 கோடி யாகவும், அலுவலகத்திற்கான தளவாடங்கள் மற்றும் இயந் திரங்கள் கொள்முதல் செய் திட தொடராச் செலவின மாக ரூ. 9 இலட்சமும் ஆக மொத்தம் ரூ. 1.09 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அருங்காட்சியகங்கள் துறை அறிவிப்புகள்
1. சென்னை அரசு அருங்காட்சியகத்தின் வளர் கலைக் கூடம், மானுடவியல் கூடம், சிறுவர் அருங்காட்சி யகம் மற்றும் பாந்தியன் கட்ட டங்கள் ரூ. 10 கோடி செலவில் பழுதுபார்த்து சீரமைக் கப்படும்.
2. அனைத்து அருங்காட் சியகங்களிலும் உள்ள சேகரிப்புகளை பட்டியலிடுவ தற்கு தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் “அருங்காட் சியக தகவல் அமைப்பு” ரூ. 1.5 கோடி செலவில் உருவாக் கப்படும்
3. வேலூர் அரசு அருங்காட் சியகம் பார்வையாளர்களுக் கான வசதிகளுடனும் நவீன காட்சியமைப்பு மற்றும் ஊடாடும் தொழில் நுட்பங்க ளு டனும் ரூ. 1கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
4. மதுரை அரசு அருங்காட் சியகத்தில் உள்ள சிற்பப் பூங்கா மற்றும் விலங்கியல் காட்சிக் கூடங்கள் ரூ. 50 இலட்சத்தில் மேம்படுத்தப் படும்.
5. கடலூர் அரசு அருங்காட் சியகத்தின் உள்கட்டமைப்பு மற்றும் காட்சியமைப்பு முறை கள் நவீன முறையில் ரூ.50 இலட்சத்தில் மேம்படுத் தப்படும்.
6. சென்னை ஹுமாயுன் மகால் பாரம்பரிய கட்ட டத்தில், ‘சுதந்திர தின அருங் காட்சியகம் அமைப்பதற்கு ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
தொல்லியல் துறை அறிவிப்புகள்
1. தமிழ்நாட்டின் தொன் மையான பண்பாட்டு மரபு களை காலவரிசைப்படி அறிந்து கொள்வதற்காக தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் வரலாற்று நில வரை படத் தொகுதி (கிஜிலிகிஷி) தயா ரிக்கும் பணிகள் ரூ. 2 கோடி செலவில் மே ற்கொள்ளப்படும்.
2. பாதுகாக்கப்பட்ட வர லாற்றுச் சின்னமும் சுற்றுலாத் தலமுமாகிய மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் வேலி மற்றும் புல்வெளித்தளம் அமைக்கும் பணிகள் ரூ. 68.20 இலட்சம் செலவில் மேற் கொள்ளப்படும்.
இந்தத் துறையில் எங்க ளோடு இருந்து, உதவி செய்தி ருக்கக்கூடிய துறையினுடைய செயலாளர் சந்திரமோகன், சந்தீப் நந்தூரி, காந்தி, அதை போல் நம்முடைய இசை பல்கலைக்கழகத்தினுடைய துணை வேந்தர் அனைவ ருக்கும் என்னுடைய நன்றி யைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
வெட்டுத் தீர்மானங்களை திரும்பப் பெற்று, மானியக் கோரிக்கையினை நீங்கள் நிறைவேற்றித் தர வேண்டு மென்று அன்போடு கேட்டு அமைகிறேன். -இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரையாற்றினார்.