நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
சென்னை, ஏப். 21- கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்ப் பற்றாக் குறை தொடர்ந்து அதிகரித்து வந்ததாக, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டினார்.
பொதுத்துறை, நிதி மற்றும் மனிதவள மேலாண் மைத் துறைகளின் மானியக் கோரிக்கைகள்மீது சட்டப் பேரவையில் 19.4.2023 அன்று விவாதம் நடை பெற்றது.
இந்த விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்
கோ.செந்தில்குமார் (வாணியம்பாடி) பங்கேற்றுப் பேசி யதாவது:
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 13 உறுப் பினர்களில் 3 பேர் மட்டுமே உள்ளனர். இந்தக் காலி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழ்நாடு அரசு சார்பில் தென் மாவட்டத்தில் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தை ஏற்படுத்த வேண்டும். 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வருவாய்ப் பற்றாக்குறை அளவைக் குறைத்தோம். 2021-இல் ஆட்சியை விட்டுச் செல்லும் போது, கடனளவு ரூ.4.85 லட் சம் கோடியாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3.85 லட்சம் கோடி அளவுக்கு பெறப்பட்டது. இந்தத் தொகையில் 90 சதவீதம் மூலதனச் செலவுகளுக்காக செலவிடப்பட்டது.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்:
கடந்த 2011-இல் திமுக ஆட்சியை விட்டுச் செல்லும் போது ரூ.13ஆயிரம் கோடி அளவுக்கு மூலதனத்துக்காக நிதி செலவிடப்பட் டது. கடந்த 10 ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கே முலதனத்துக்காக செல விடப்பட்டது. 100 சதவீதம் கூட உயர்த்தப்படவில்லை.
2003ஆம் ஆண்டு நிதி பொறுப்புடைமைச் சட்டத் தின்படி, கடன் பெறும் அளவு குறைந்து கொண்டே வந்தது. 2014-201ஆம் நிதியாண்டில் 17 சதவீதமாக இருந்த அளவு, தவறான திசைக்குப் போய், 24 முதல் 25 சதவீதம் அளவுக்குச் சென்றது.
வருவாய் பற்றாக்குறை 2014ஆம் ஆண்டு வரை ரூ.1,760 கோடி வரை உபரியாக இருந்தது. 2014ஆம் ஆண்டில் இருந்து பற்றாக் குறை ஏற்படத் தொடங்கியது. கடந்த ஆட்சியின் இறுதிக் காலத்தில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக இருந்தது என்றார்.