25.1.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல் வெளியேறுவது மக்களாட்சிக்கு விடப்பட்ட சவால் ஆளுநர் பதவியை அவமானப்படுத்துகிறார்: ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
* பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு; அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களுக்கும் அதிகரிப்பு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.
* மே.வங்கத்தில் எஸ்அய்ஆர் பணி அவசர, அவசரமாக செய்யப்படுகிறது போதிய அவகாச மின்றி செய்யப்படும் எஸ்அய்ஆர் ஜனநாயகத்துக்கு ஆபத்து: நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் வேதனை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜனநாயகத்தின் பாதுகாவலன் அல்ல வாக்குத் திருட்டின் முக்கிய சதிகாரர் தேர்தல் ஆணையம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
தி இந்து:
* துணை மருத்துவப் படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வை கட்டாயம் ஆக்குவதை கைவிடுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எழுதியுள்ள கடிதத்தில், “தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP), வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வில் (NEET) பங்கேற்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
* உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, எஸ்அய்ஆர் தர்க்க ரீதியான முரண்பாடுகள் பட்டியலில் உள்ளவர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் சனிக்கிழமை மாலை தனது இணையதளத்தில் வெளியிட்டது
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசாவில் சங்கி காவிக் கும்பல்கள் வன்முறை: கிறிஸ்தவ பாதிரியார் மீது தாக்குதல்: ‘ஒருவரின் நம்பிக்கையை பின்பற்றுவது பாவமா?’: தாக்குதலுக்குப் பிறகு, ஒடிசா போதகர் வாடகை வீட்டைக் காலி செய்யுமாறு கேட்கப்படுகிறார். ஜனவரி 4 அன்று, தேன்கனல் மாவட்டத்தில் உள்ள பர்ஜாங் காவல் நிலையத்தின் கீழ் உள்ள கந்தர்சிங்கா கிராமத்தில் போதகர் பிபின் பிஹாரி நாயக் 15-20 காவிக் கும்பலால் தாக்கப்பட்டார்.
* அதானிக்கு அழைப்பானை அனுப்ப மோடி அரசு மறுப்பு: தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆட்சேபனைகளை காரணம் காட்டி, கவுதம் அதானி மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தால் (SEC) வழங்கப்பட்ட அழைப்பாணைகளை முறையாக வழங்க இந்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இரண்டு முறை மறுத்துவிட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* புதிய யு.ஜி.சி. விதிமுறைகளைத் திருத்தக் கோரிக்கைகளுக்கு மத்தியில், கல்வித் துறையில் ‘சுயநல சக்திகள்’ இருப்பதாக ஒன்றிய கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி ஒப்புதல். ஜனநாயக இந்தியாவில் சமூக நீதிக்கு எப்போதும் ஒரு இடம் இருக்கும் என்று பேட்டி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* அசாம் வாக்காளர் பட்டியல் மீது தாக்குதல்: படிவம்-7 தவறாக பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு, உண்மையான வாக்காளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக முதலமைச்சர்.
– குடந்தை கருணா
