தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போய்விடுவதா? மலேசியாவிலேயே இருப்பதா?
மலேசியக் குடியுரிமை பெறுவதா, வேண்டாமா? என்று மலேசியத் தமிழர்களிடையே குழப்பம் ஏற்பட்டது!
மலேசியக் குடியுரிமை பெறுவதா, வேண்டாமா? என்று மலேசியத் தமிழர்களிடையே குழப்பம் ஏற்பட்டது!
மலேசியக் குடியுரிமை பெறுங்கள்; மலேசியாவினுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்; நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்ப வருவதைப் பற்றி யோசிக்காதீர்கள் என்றார் தந்தை பெரியார்!
சென்னை, ஜன.25 தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போய்விடுவதா? மலேசியாவிலேயே இருப்பதா? மலேசியக் குடியுரிமை பெறுவதா, வேண்டாமா? என்ற குழப்பம் இருந்தது மலேசிய தமிழர்களிடத்தில். பெரியார் அவர்கள், அந்தக் குழப்பத்தைத் தீர்க்க கூடிய வகையில், எல்லா கூட்டங்களிலேயும் பேசுகிறார். நீங்கள் மலேசியக் குடியுரிமை பெறுங்கள்; மலேசி யாவினுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள். நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்ப வருவதைப் பற்றி யோசிக்காதீர்கள்! இங்கேயே இருந்து, நீங்கள் இவ்வளவு காலம் மலேசியாவினுடைய வளத்திற்கும், செழுமைக்கும் பாடுபட்டு இருக்கிறீர்கள். இது உங்களு டைய நாடு. ஆக, இங்கேயே இருந்து, இங்கேயே குடியுரிமை பெற்று நீங்கள் இங்கே வாழ வேண்டும். எல்லாரும் குடியுரிமை பெறுங்கள் என்று பெரியார் சொன்னதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள்.
- தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போய்விடுவதா? மலேசியாவிலேயே இருப்பதா? மலேசியக் குடியுரிமை பெறுவதா, வேண்டாமா? என்று மலேசியத் தமிழர்களிடையே குழப்பம் ஏற்பட்டது!
- மலேசியக் குடியுரிமை பெறுங்கள்; மலேசியாவினுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்; நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்ப வருவதைப் பற்றி யோசிக்காதீர்கள் என்றார் தந்தை பெரியார்!
- ‘பெரியார் விருது’ வழங்கும் விழா!
- என்னைத் தேற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறேன்!
- பெரியாரை புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது!
- பெரியாருடைய வாழ்க்கை முழுவதுமே பொது வாழ்க்கை!
- தன்னுடைய 90 ஆவது வயதில் கூட…
- ‘காந்தி கிணறு’’கள் ஜாதியை ஒழித்து விடாது; ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால், பொதுக்கிணறுகள் வேண்டும்!
- ‘‘மலேசியா, சிங்கப்பூரில் பெரியார்’’ நூல்!
- மலேசியாவினுடைய பல பகுதிகளில் உரையாற்றியிருக்கிறார் பெரியார்!
- மலேசிய தமிழர்களுடைய பிரச்சினையில் ெபரியார் கவனம் செலுத்தினார்!
- மலேசிய குடியுரிமை பெறுங்கள்; மலேசியாவினுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்!
‘பெரியார் விருது’ வழங்கும் விழா!
கடந்த 17.1.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழாவும், பெரியார் விருது வழங்கும் விழாவும் நடைபெற்றன. இவ்விழாவில், எழுத்தாளர் பெருமாள் முருகன் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
ஆசிரியர் அய்யா அவர்களே, திராவிடர் கழகத் தோழர்களே, அனைவருக்கும் வணக்கம்!
என்னைத் தேற்றிக் கொள்ளக்கூடிய
நிலையில் இருக்கிறேன்!
நிலையில் இருக்கிறேன்!
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் வழங்கியுள்ள பெரியார் விருதைப் பெறுவதில் உண்மையில் மிகப்பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் என்னைப் பற்றி அறிமு கப்படுத்தும் போது பல விஷயங்களைச் சொன்னார். உண்மையில் தந்தை பெரியார் பெயரிலான விருதைப் பெறுவதற்கு எந்த அளவுக்கு நான் தகுதியானவன் என்ற கேள்வி, எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. ஒரு வகையில், நானே என் செயல்பாடுகளைக் கொஞ்சம் மறுபார்வை பார்த்து, ஓரளவுக்குத் தகுதி இருக்கிறது நமக்கு என்று என்னைத் தேற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கிறேன்.
நான் மாணவப் பருவத்தில் இருந்தபோது, மார்க்சிய ஈடுபாடு கொண்டு, மார்க்சிய இயக்கத்தில் கிட்டத்தட்ட ஏழு, எட்டு ஆண்டுகள் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டவன். 1990 –களில் பெரியாரை மறுவாசிப்பு செய்யக்கூடிய எழுச்சி ஓர் இயக்கம் போல, நவீன இலக்கியவாதிகளிடம் ஒரு கருத்து பரவியது. அந்தச் சந்தர்ப்பத்தில், நானும் பெரியாருடைய எழுத்துகளை வாசிக்க வேண்டும் என்று ஆர்வமுற்று அவற்றை வாசிக்கத் தொடங்கினேன். ஏனென்றால், நான் செயல்பட்ட அந்த மார்க்சிய இயக்கம், ‘‘மார்க்சியமா? பெரியாரியமா?’’ என்ற தலைப்பிலேயே ஒரு புத்தகம் வெளியிட்ட இயக்கம். அதில் காரல் மார்க்ஸ் உடைய படத்தைக் கம்பீரமாகவும், பெரியாருடைய படத்தை அவருடைய தலை லேசாகத் தொய்வானது போலவும் அட்டைப்படம் போட்டு வெளியிட்ட ஓர் இயக்கம்.
பெரியாரை புரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வு எனக்குத் தோன்றியது!
‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’ என்றே ஒரு தொடரையும் அந்த இயக்கப் பத்திரிகை வெளியிட்டது. அந்தப் பின்னணியில் வந்தவன் நான். ஆனால், 1990–களில் பெரியாரை வாசிக்க ஆரம்பித்த பிறகு, என்னுடைய மனோபாவம், என்னுடைய கருத்தோட்டம் முழுவதுமாக மாறியது. நாம் பெரியாரை வாசித்து, ‘அவர் சொல்வதிலிருந்து முடிவு செய்ய வேண்டும்; பெரியாரை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ என்ற உணர்வு எனக்கு அப்போது தோன்றியது.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் பெரியாரைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டு வருகிறேன். அப்படி வாசித்து வரும்போது, பெரியாருடைய பல பரி மாணங்கள் எனக்குப் புரிய வருகின்றன. உண்மையில் நான் பெரியாரை விமர்சிக்கக் கூடிய அளவுக்கு, அல்லது பெரியார் மீது என்னுடைய பார்வையை வைக்கக்கூடிய அளவுக்கு, என்னுடைய கருத்துகளை வைத்துப் பேசக்கூடிய அளவுக்கு இன்னும் தயாராகவில்லை என்றுதான் நினைத்துக் கொள்கிறேன். பெரியாரைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அதுதான் நாம் முத லில் செய்ய வேண்டியது என்று நான் நினைக்கிறேன்.
பெரியாருடைய வாழ்க்கை
முழுவதுமே பொது வாழ்க்கை!
முழுவதுமே பொது வாழ்க்கை!
கிட்டத்தட்ட பெரியாருடைய வாழ்க்கை முழுவதுமே பொது வாழ்க்கைதான். பெரியார் அவர்கள், வ.உ.சி. கப்பல் வாங்குவதற்குப் பணம் திரட்டிக் கொடுத்த தகவல் பற்றி எல்லாம் இப்போது செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றி சில பேர் சர்ச்சை எல்லாம் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘சுதேசி ஸ்டீம்’ என்ற அந்தப் புத்தகத்தை
ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிக் கொண்டிருந்த போது, நான்தான் இந்தத் தகவலை அவருக்குச் சொன்னேன். ‘‘அப்படியா? இப்படி ஒரு தகவல் இருக்கிறதா?’’ என்று அவர் கேட்டார். ‘‘நான் படித்த நூலில் இருந்து அதற்கு ஆதாரம் இருக்கிறது’’ என்று எடுத்துக் காட்டினேன். பிறகு, தன்னுடைய நூலில் அதை அவர் சேர்த்துக் கொண்டார்.
1905 ஆம் ஆண்டிலிருந்து நீங்கள் பெரியாருடைய வாழ்க்கையை எடுத்துக்கொண்டால், கிட்டத்தட்ட வாழ்க்கை முழுவதுமே அவர் பொதுச் சமூகத்திற்காக வாழ்ந்தவர். அந்த வாழ்க்கையில், நாம் ஏதாவது ஒரு பகுதியில், ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பேசியதை மட்டும் எடுத்துக்கொண்டு, ‘‘இதுதான் பெரியார்’’ என்று காட்டிவிட முடியாது. அவருடைய முழு வாழ்க்கை, அவருடைய பேச்சுக்களாக, உரைகளாக, எழுத்துகளாக நம் முன் இருக்கின்றன. அவற்றை நாம் வாசித்து, முதலில் பெரியாரைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அந்த உணர்வை நான் 1990–களிலேயே பெற்றேன். அதிலிருந்து பெரியாரை இன்றைக்கு வரைக்கும் விடாமல், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், எதற்காகவாவது தொடர்ந்து வாசித்துக் கொண்டேதான் நான் இருக்கின்றேன். அப்படி வாசிக்கும் போது, பலவிதமான புரிதல்கள் ஏற்படுகின்றன. நமக்கு ஏற்கெனவே இருந்த கருத்துகள் மாறுகின்றன.
தன்னுடைய 90 ஆவது வயதில் கூட…
எப்போதுமே பெரியாருடைய பகுத்தறிவுப் பார்வை என்பது புதியவற்றை ஏற்றுக்கொள்ளுதல்! பல பேர் தேங்கிப் போய்விடுவார்கள். தங்களுடைய 20 வயதில் 25 வயதில் என்ன கருத்துக் கொண்டிருந்தார்களோ, அதே கருத்தையே, தங்களுடைய 60 வயதிலும் கொண்டிருப்பார்கள். ஆனால், பெரியார் அப்படியல்ல; தன்னுடைய 90 ஆவது வயதில் கூட, அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கணினி என்ற ஒரு கருவி வந்திருக்கிறது என்றவுடன், அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிச் சென்று பார்த்தவர்.
நவீன காலத்தில் ஏற்படக்கூடிய தொழில்நுட்ப மாற்றங்கள், அதன் மூலமாக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், இவற்றை எல்லாம் பார்த்து, அதை வரவேற்றவர். அப்படிப்பட்ட மனநிலை பெரியாருக்கு இருந்தது. ஆகவே, பெரியாரை நாம் புரிந்து கொள்வது என்பது மிக மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் தொடர்ந்து பெரியாரை வாசித்துக் கொண்டே வரும்போது, வித விதமான கருத்துகள் எனக்குத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.
‘காந்தி கிணறு’’கள் ஜாதியை ஒழித்து விடாது; ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால், பொதுக்கிணறுகள் வேண்டும்!
நான், ‘காந்தி கிணறு’ என்று ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரை, பெரியாருடைய எழுத்துகளை வாசித்தபோது தோன்றிய ஒரு சிறு பொறிதான். 1920–களிலே, ‘காந்தி கிணறு’ என்று ஒருவகை கிணறுகளைத் தமிழ்நாட்டில் தோண்டிக் கொடுத்தார்கள். அது யாருக்கு என்றால், கிராமத்தில் வாழக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பில் கிணறு தோண்டுவார்கள். அவர்களுக்கு நீராதாரம் வேண்டும் என்பதற்காக – அந்தக் கிணற்றுக்குக் ‘காந்தி கிணறு’ என்று பெயர் சூட்டுவார்கள். அதற்காக நிதி வசூலித்து, அந்தக் கிணற்றைத் தோண்டுவார்கள். காரைக்குடி பகுதியில், அப்படி ஒரு கிணற்றின் திறப்பு விழாவுக்குச் சென்ற பெரியார் சொல்கிறார், ‘‘நான், இந்தக் கிணற்றைத் திறந்து வைக்கிறேன்; தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீர் கிடைக்கும், சரிதான். ஆனால், இதுபோன்ற ‘காந்தி கிணறு’கள் ஜாதியை ஒழித்து விடாது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால், பொதுக் கிணறுகள் வேண்டும். அனைத்து ஜாதியினரும் தண்ணீர் எடுக்கக்கூடிய பொதுக் கிணறுகள் தான் தேவை. இந்தக் கிணற்றில் நீங்கள் தண்ணீர் எடுக்கக் கூடாது என்றால், சரி உங்களுக்குத் தனிக் கிணறு என்று உங்களை ஒதுக்கி விடக்கூடாது’’ என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார்.
‘‘மலேசியா, சிங்கப்பூரில் பெரியார்’’ நூல்!
இப்படித்தான் எல்லாவற்றிலுமே ஜாதி ஒழிப்பு என்ற பார்வையை முன்வைத்துதான், அவர் எதையுமே பார்க்கக் கூடியவர். அதே சமயம், நிறைய விஷயங்களைப் பெரியாரைப் பற்றி நான் சொல்ல முடியும். அண்மையில் நான் உணர்ந்து கொண்ட ஒன்று, இரண்டைச் சொல்லி என்னுரையை நான் முடித்துக் கொள்கிறேன். அண்மையில் நான் மலேசியாவுக்கு 4, 5 நாள்கள் பயணமாகச் சென்றிருந்தேன். அப்போது மலேசியாவைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர் கோவிந்தசாமி அவர்கள், என்னைப் பார்க்க வந்து, என்னைச் சந்தித்து ‘‘மலேயாவில் பெரியார்’’ என்ற ஒரு நூலைக் கொடுத்தார். அதற்குப் பின்தான் நான், ‘‘மலேசியா, சிங்கப்பூரில் பெரியார்’’ என்ற ஒரு பெரிய தொகுதி, திராவிடர் கழக வெளியீடு, ஆசிரியர் அவர்கள் தொகுத்து வந்திருக்கக்கூடிய அந்த நூலை, இங்கே வந்த பின், வாங்கி நான் வாசித்தேன். உண்மையில் இந்த நூல்களைப் படித்தபோது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. இன்றைக்கும் நாம் ‘பெரியார்’ என்று சொன்னவுடனே, ‘கடவுள் இல்லை’ என்று சொன்னவர் என்றுதான் எல்லாரும் சொல்கிறோம். அவரே ஓரிடத்தில் சொன்னார், ‘‘கடவுளுக்கும், எனக்கும் என்ன வழக்கு இருக்கிறது? கடவுள் பெயரால் ஜாதியைக் கொண்டு வந்து வைக்கிறார்கள். அதனால் கடவுளை எதிர்க்க வேண்டி இருக்கிறது’’ என்று சொன்னார்.
மலேசியாவினுடைய பல பகுதிகளில் உரையாற்றியிருக்கிறார் பெரியார்!
மலேசியாவுக்குப் பெரியார் அவர்கள் இரண்டு முறை பயணம் செய்திருக்கிறார். அந்தப் புத்தகத்தை நீங்கள் படித்தீர்கள் என்றால், விரிவாக இருக்கும். அவருடைய பயணத்துக்கு அங்கே இருந்தவர்களில் ஒரு பிரிவினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். பினாங்கில் இருந்து கப்பலில் இருந்து பெரியாரை இறங்க விடாமல் கூட செய்திருக்கிறார்கள். ஆனால், இன்னொரு பிரிவினர் போராடி, அவரை வழிநடத்திச் சென்றிருக்கிறார்கள். மலேசியாவினுடைய பல பகுதிகளுக்குச் சென்று உரையாற்றியிருக்கிறார்.
1955 இல் பெரியார் அங்கே சென்ற போது, ‘‘நீங்கள் கடவுள் இல்லை என்று பேசி, இங்கே இருக்கிற மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி விடுவீர்கள்’’ என்று பயப்படுகிறார்கள். அப்படி ஒரு பரப்பல், எப்போதுமே இதுபோன்ற வதந்தியை, பொய்யைப் பரப்பக்கூடிய ஒரு பிரிவு, சமூகத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்குத் தெரியும், இன்றைக்கு அரசியலில் ஹிந்துத்துவம் எப்படி, அப்படி வதந்திகளையும், பொய்க ளையும் பரப்பிக் கொண்டிருக்கிறது என்று.
மலேசிய தமிழர்களுடைய பிரச்சினையில்
ெபரியார் கவனம் செலுத்தினார்!
ெபரியார் கவனம் செலுத்தினார்!
அதேபோல, மலேசியாவுக்குப் போனபோது பெரி யாரிடம் சொன்னார்கள், இப்படி பரப்புகிறார்கள் என்று. பெரியார் சொல்கிறார், ‘‘நான் பார்த்துக் கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு,
‘‘நாங்கள் சொல்லுவதெல்லாம் இழிவான நிலையிலிருந்து நாம் மாறுவதற்காக ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதுதான். இது ஒன்றும் புதிதல்ல. கிறிஸ்தவர்கள், முகம்மதியர்கள் தங்களிடம் ‘ஒரே கடவுள்’ கொள்கையைத்தான் கடைப்பிடித்து வருகிறார்கள். மனித சமுதாயத்தில் ஒன்றுக்கொன்று உயர்ந்த ஜாதி என்று சொல்லக்கூடாது. நம்முடைய மக்களிலே யாருக்குமே இந்த எண்ணமில்லையே!’’ என்று அதோடு அதைக் கடந்துவிட்டு, மலேசிய தமிழர்களுடைய பிரச்சினையில் அவர் கவனம் செலுத்தினார்.
1955 இல் வெளிவந்த அந்த நூலில் அவர்கள் எழுதுகிறார்கள், ‘‘பெரியார் இங்கே வந்ததினால்தான் மலேசிய தமிழர்களுடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது’’ என்று. ஏனென்றால், அப்போது மலேசியா பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விடுதலை பெற்று ஆட்சி, அவர்கள் கையில் வரக்கூடிய சமயம். அப்போது அங்கே இருக்கக்கூடிய தமிழர்கள் என்ன செய்வது? தமிழ்நாட்டுக்குத் திரும்பிப் போய்விடுவதா? மலேசியாவிலேயே இருப்பதா? மலேசியக் குடியுரிமை பெறுவதா, வேண்டாமா? என்ற குழப்பம் இருந்தது.
மலேசிய குடியுரிமை பெறுங்கள்; மலேசியாவினுடைய முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள்!
அப்போது, பெரியார் அவர்கள், அந்தக் குழப்பத்தைத் தீர்க்க கூடிய வகையில், எல்லா கூட்டங்களிலேயும் பேசுகிறார். நீங்கள் மலேசியக் குடியுரிமை பெறுங்கள்; மலேசியாவினுடைய முன்னேற்றத்திற்குப் பாடு படுங்கள். நீங்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்ப வருவதைப் பற்றி யோசிக்காதீர்கள்! இங்கேயே இருந்து, நீங்கள் இவ்வளவு காலம் மலேசியாவினுடைய வளத்திற்கும், செழுமைக்கும் பாடுபட்டு இருக்கிறீர்கள். இது உங்களு டைய நாடு. ஆக, இங்கேயே இருந்து, இங்கேயே குடியு ரிமை பெற்று நீங்கள் இங்கே வாழ வேண்டும். எல்லாரும் குடியுரிமை பெறுங்கள் என்பதை வலியுறுத்திப் பேசுகிறார்.
(தொடரும்)
