– கருஞ்சட்டை –
இது வெளிநாட்டில்!

அரபு நாடுகளுக்கு மோடி சென்றாலும், அரபு நாட்டுத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்தாலும் கட்டிப்பிடித்து வரவேற்கும் பிரதமர் மோடி, இந்திய முஸ்லீம்களோடு கைகுலுக்கவும், அவர்கள் தரும் பரிசுப்பொருட்களை வாங்காமல் தவிர்க்கவும் செய்கிறார்.
கடந்த ஜூன் மாதம், ரியாத் சென்ற மோடி, சவுதி அரசரைக் கட்டியணைத்துப் பாசத்தைப் பொழிந்தார். வெளிநாட்டு விருந்தினர்கள் குறித்த சில விதிமுறைகள் உள்ளன. பொதுவாக வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அங்குள்ள நடைமுறைகள் எடுத்துக்கூறப்படும். அப்படி இருந்தும் மோடி சவுதி அரசரைக் கட்டித் தழுவினார். இது தொடர்பாக அந்த நாட்டு ஊடகங்கள் எழுதின.
அப்போது ஜம்மு – காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக அவர் சவுதி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டுத் திரும்பினார். இதனால் மோடியின் சவுதி பயணத்தில் நடந்த விதிமீறல் அவ்வளவாகப் பேசப்படவில்லை.
இது உள்நாட்டில், அதாவது இந்தியாவில்!
குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய மத குரு தந்த பரிசுப் பொருளை வாங்க மறுத்துள்ளார் பிரதமர் மோடி.
இது தொடர்பாக பாஜக தலைமை என்ன விளக்கம் அளித்தது? மோடி அனைவருக்கும் பொதுவானவர் என்று காட்டுவதற்காக குஜராத்தில் நடந்த நிகழ்ச்சியில் இஸ்லாமியரின் பரிசை வாங்க மறுத்துவிட்டார் என்று விளக்கம் அளித்தது.
வெளிநாட்டுக்குச் சென்றால், முஸ்லிம்கள் இனிக்கிறார்கள்.
உள்நாட்டுக்குள் – அதாவது இந்தியாவிலோ முஸ்லிம்கள் கசக்கிறார்கள்.
ஏனிந்த துவேஷமும் – இரட்டை வேடமும்?
