“கோயில்களிலுள்ள குருக்கள்மாரைப் பார். கோயிலுக்குப் போவோரிடம் அவர்கள் எவ்வாறு பணம் பறிக்கிறர்கள்! கங்கைக் கரைக்குச் சென்றால், ஏழைக் கிராமவாசிகள் தட்சணை கொடுத்தாலொழிய ஒருவிதக் கிரியையும் செய்யமுடியாது என்று பிடிவாதம் செய்யும் பண்டாக்களைக் (புரோகிதர்கள்) காணலாம். குடும்பத்தில் பிரசவமோ, கலியாணமோ, சாவோ எது நேர்ந்தாலும் புரோகிதன் வந்துவிடுகிறான். உடனே அவனுக்குத் தட்சணை கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
ஒவ்வொரு மதத்திலும் இப்படியேதான். ஹிந்து, கிறிஸ்தவம், இஸ்லாம், ஜாராஷ்டிரம் எதுவாயினும் சரி, இதற்கு விலக்கு இல்லை.”
– ஜவகர்லால் நேரு அவர்கள் மகள் இந்திரா அவர்களுக்கு சிறையிலிருந்து எழுதிய கடிதங்களின் தொகுப்பான ‘Glimpses of World History’ எனும் நூலிலிருந்து…