சென்னை, ஜன.24– 5 ஆண்டு களில் 2 ஆயிரம் புதிய மருத்துவக் கட்டடங்கள் திறக்கப்பட்டிருப்பதாக சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் நேற்று (23.1.2026) கேள்வி நேரத்தில், பரமத்தி-வேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், எலச்சிப்பாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கும், அதன் பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய துணை கேள்வி களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பதில் வருமாறு:-
வேலகவுண்டம்பட்டி கிராமம் எலச்சிபாளையம் ஊராட்சியைச் சார்ந்தது. அந்த கிராம மக்கள் தொகை 3,651. இக்கிராமத்தில் துணை சுகாதார நிலையம் உள்ளது. எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. வேலகவுண்டம்பட்டி கிராமத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் எர்ணாபுரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமும், 14 கி.மீ. தொலைவில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் செயல்பட்டு வருவதால் இங்கு புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் இல்லை.
5 ஆண்டுகளில்
2,000 கட்டடங்கள்
இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை ஏறத் தாழ 3,000 மருத்துவக் கட்டடங்களில் 1,500 கட்டடங்கள் பயன்படுத்த முடியாத சிதிலமடைந்த கட்டிடங்கள் என்றும், ஒரு சில கட்டடங்கள் வாடகை கட்டடங்களிலும் இயங்கி வந்தன. முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் படி, 2,000 கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டு இந்த 5 ஆண்டு களில் திறந்து வைக்கப்பட்டி ருக்கிறது.
மருத்துவர்களைப் பொறுத்த வரை இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு, முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி.
‘பூஜ்ஜிய’ சதவீதம் காலிப்பணி யிடம் என்கின்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை அனைவரும் நன்றாக அறிவார்கள். என்றாலும் உறுப்பினர்களின் கோரிக்கையான கூடுதல் மருத்துவர்களை நியமிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மிக விரைவில்…
தண்டையார்பேட்டையில் கட்டப்பட்டுவரும் மருத்துவ மனையும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கட்டப்பட்டுள்ள கட்டடமும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் கட்டடம் போன்ற பல்வேறு கட்டடங்கள் மிக விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட உள்ளன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
வள்ளியூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்குகூட பணி யிடங்கள் நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவ மனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு வருவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் பதிலளித்தார்.
