டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* “டபுள் இன்ஜின் இல்லை… டப்பா இன்ஜின்” மோடிக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி: காலையில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சென்ற பிரதமர்: பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் எதுவும் சொல்லாமல் மோடி டில்லிக்கு பறந்தார்.
* ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேறியது.தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பெயரை மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* “தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தின் காரணமாக நாள்தோறும் 3-4 பேர் இறக்கிறார்கள்” – மம்தா காட்டம்.
தி இந்து:
* “தொகுதி மறுசீரமைப்பை கவனமுடன் செய்ய வில்லை என்றால், நாட்டின் கூட்டாட்சிக்கு ஆபத்து” என்கிறார் மேனாள் தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி.
* புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம் பரவலாக்கப்படும்: புதிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டமான, விக்சித் பாரத் – ரோஜ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம், 2025-க்கு எதிரான பிரச்சாரம், டில்லி எல்லையில் முகாமிட்டிருந்த 13 மாத கால விவசாயிகள் போராட்டத்தை போலில்லாமல், பரவலாக்கப்படும் என்று என்ஆர்இஜிஏ சங்கர்ஷ் மோர்ச்சா தெரிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அமெரிக்காவின் 50% வரியால் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு: “4.5 கோடி வேலைகள் மற்றும் லட்சக்கணக்கான வணிகங்கள் ஆபத்தில் உள்ளன. உங்களின் பலவீனம் இந்திய பொருளாதாரத்தை பாதிக்க அனுமதிக்க கூடாது” ? பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜோதிர் பீட சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் மற்றும் மகா மேளா நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே நீடித்து வரும் சர்ச்சைக்கு மத்தியில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா ஆகியோர் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்து, போராட்டம் குறித்து மாறுபட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
தி டெலிகிராப்:
* அனில் அம்பானியின் வங்கிக் கடன் ‘மோசடி: தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG) ஆகியோர் வங்கிகளிலிருந்து 1.5 லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த நிலை அறிக்கைகளை சிபிஅய் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரகத்திடம் உச்சநீதிமன்றம் அறிக்கை கோரியது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* திருப்பரங்குன்றம் கோயில் தீபத் தூண் விவகாரம்: ‘திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முழுவதையும் ஒன்றிய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற மனு மீது, ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
குடந்தை கருணா
