நாங்களும் சோடா பாட்டில் வீசுவோம் என்று வைரமுத்துவிற்கு எதிராக ‘போர்க்குரல்’(?!) எழுப்பிய மன்னார்குடி ஜீயர் முன்னிலையில், இஸ்லாமியர்கள் என்று சொல்லப்படும் இரு பெண்கள் தாய் மத்தத்திற்கு திரும்பியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. “இவர்கள் எந்த ஜாதியில் இணைக்கப்படுவார்கள்?”
ஜாதி இல்லாத இந்து மதம் சாத்தியமா?
இந்து மதம் என்பது அடிப்படையில் ஸநாதன தர்மம் மற்றும் ஜாதியப் படிநிலைகளை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாகவே வரலாற்றில் இருந்து வருகிறது. ஒருவர் இந்துவாக இருக்கிறார் என்றால், அவர் பிறப்பால் ஏதோ ஒரு ஜாதியைச் சார்ந்தவராகவே அடையாளப்படுத்தப்படுகிறார்.
இந்து மதத்தில் ஒருவர் பிறப்பு முதல் இறப்புவரை அவர் எந்தச் ஜாதிக்குள் உள்வாங்கப்படுகிறார் என்பதைப் பொறுத்தே அமைகின்றன.
புதிய பிரிவுகள்: தற்போது வரை இந்து மதத்தில் “ஜாதி இல்லாத புதிய பிரிவு” என்று சட்டப்பூர்வமாகவோ அல்லது சமய ரீதியாகவோ அங்கீகரிக்கப்பட்ட பிரிவுகள் ஏதுமில்லை.
இந்தக் கேள்விக்குப் பின்னால் இருக்கும் எதார்த்தம் மிகவும் சிக்கலானது. மதம் மாறுபவர்களைப் பெரும்பாலும் சூத்திரர் பட்டியலில் சேர்க்கின்றனர்.
மன்னார்குடி ஜீயர் மதம் மாற்றுபவர்களுக்கு ‘சமாஸ்ரயணம்’ (முத்திரை இடுதல்) போன்ற சடங்குகளைச் செய்து வைப்பார்கள். இது அவர்களை வைணவ வழிபாட்டு முறைக்குள் ஒருவரை இணைப்பது எளிது. ஆனால், ஏற்கனவே ஒரு ஜாதியப் படிநிலைக்குள் இறுகிக் கிடக்கும் இந்து சமூகக் கட்டமைப்பில், மதம் மாறி வருபவர்களை அந்தச் சமூகங்கள் தங்களுக்குள் ஒருவராக ஏற்குமா என்பது கேள்விக்குறியே. ஜாதிச் சான்றிதழ்களின் மதம் மாறியவர்கள் ஜெனரல் கேட்டகிரியில் வைக்கிறார்கள்.
“தாய் மதம் திரும்புதல்” என்பது ஒரு மத அடையாள மாற்றமாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மதம் என்பது ஜாதியோடு பின்னிப் பிணைந்தது. “ஜாதியற்ற ஒரு இந்துவை உருவாக்குவது என்பது, அஸ்திவாரம் இல்லாத ஒரு கட்டடத்தை எழுப்புவதற்கு ஒப்பானது.”
இந்தத் பெண்கள் இஸ்லாமியப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதால், அவர்களின் முன்னோர் எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தால் மட்டுமே அந்தச் ஜாதியில் இணைய முடியும். அப்படித் தெரியாத பட்சத்தில், அவர்கள் ஒரு “சமூக வெற்றிடத்தில்” இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
இந்து மதம் தன்னைத் தற்காத்துக் கொள்ளவும், பரப்பவும் மதம் மாற்ற நிகழ்வுகளை ஊக்குவித்தாலும், மதம் மாறி வருபவர்களுக்குச் சமமான ஜாதிய அந்தஸ்தை வழங்குவதில் ஒரு தெளிவான பாதையை இதுவரை வகுக்கவில்லை.
மன்னார்குடி ஜீயர் நடத்திய இந்த நிகழ்வு, ஆன்மிக ரீதியாக அவர்களை இந்துக்களாகக் காட்டினாலும், சமூக ரீதியாக அவர்கள் “யார்?” என்கிற கேள்விக்கு இந்து மதத் தலைவர்களிடம் இன்றுவரை முறையான பதிலில்லை.
