6.11.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
👉 ஜனநாயகத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் ஆளு நர்கள் காலம் தாழ்த்த முடியாது என்கிறது தலையங்க செய்தி.
👉 சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.500 மானியம் விவசாய கடன் தள்ளுபடி, குழந்தைகள் பள்ளி முதல் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி – சட்டீஸ்கர் காங். தேர்தல் அறிக்கை
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
👉 பாஜகவின் கைப்பாவையாக அத்தனை துரோகத் துக்கும் சுயநலத்துடன் துணை நின்றது, அடிமை அ.தி.மு.க. இன்றைக்குப் பிரிந்தது போல நாடகம் நடத்தும் இந்த கும்பலின் துரோகங்களை பட்டியல் போட்டு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும், வாக்குச்சாவடி பொறுப்பா ளர்கள் பயிற்சிப் பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தி டெலிகிராப்
👉 மோடி அரசின் இரண்டு முக்கிய கிராமப்புற நலத் திட்டங்கள் நிதியாண்டின் முதல் காலாண்டில் மோசமான முன்னேற்றத்தைக் காண்கின்றன: புள்ளியியல் அமைச் சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் அறிக்கை
எகனாமிக் டைம்ஸ்
👉என் மீது கிரிமினல் வழக்குகளை போட பாஜக திட்டமிட்டு உள்ளது. நெறிமுறைக் குழுவில் உள்ள பதிவின் துல்லிய மான பதிவுகள் என்னிடம் உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மக்களவை உறுப்பினர் மஹுவா மொய்த்ரா காட்டம்.
– குடந்தை கருணா