ஆந்திராவில் உள்ள அனந்தப்பூர் என்ற ஊரில் கோயில் திருவிழாவில் தவறிழைத்த சாமியை முகத்தில் மிதிக்கும் சடங்கு நடந்தது.
இதற்காக பார்ப்பன அர்ச்சகர் சிறப்பு விரதம் இருந்து கடவுளிடம் மன்னிப்பு கேட்டு பிறகு சிவன் தலையில் மிதிப்பாராம். இந்தச் சடங்கில் கலந்துகொண்டால் பாவங்கள் தீரும் என்று கதைவிட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பழமையான சிதிலமடைந்த சிவன் கோயில் ஒன்றில் படுத்துத் தூங்கிய பழங் குடியின சிறுவன் மீது கோயில் கருவறையில் சிவலிங்கத்தின் பக்கமாக காலை வைத்து தூங்கினான் என்று, அவர் மீது இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டார் என்று கூறி கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். இது நடந்தது 2025 ஆகஸ்ட். இன்றும் அவர் வறுமையின் காரணமாக வழக்குரைஞர் எவரும் கிடைக்காமல் பிணையில் வெளிவரமுடியாமல் விசாரணைக் கைதியாகவே சிறையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிதிலமடைந்த கோயில் வளாகத்தில் தூங்கியவருக்கு சிறை
புகழ்பெற்ற கோயிலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் சிவன் சிலையை பார்ப்பான் மிதிப்பான் – அதைக் கண்டால் பாவம் தீருமாம்! பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதியா?
