மிசா காலக் கொடுமையில் 358 நாட்கள் சிறையிலிருந்து ஆசிரியர் கி.வீரமணி மீண்டு வெளிவந்த நாள் இன்று! (23.1.1977)

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மிசா: இந்திய ஜனநாயகத்தின் கறுப்புப் பக்கம் – ஓர் வரலாற்றுப் பார்வை

இந்திய வரலாற்றில் 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலைக் காலம் (Emergency) ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட ஒரு காலக்கட்டமாகும். இந்தச் சூழலில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் அமல்படுத்தப்பட்ட மிசா (MISA – Maintenance of Internal Security Act) எனப்படும் ‘உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம்’, எதிர்க்கட்சி யினரை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்ட மிகக் கொடிய ஆயுதமாக மாறியது.

என்ன இந்த மிசா (MISA) சட்டம்?

1971-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டம், நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவசரநிலைப் பிரகடனத்தின் போது, இது அரசியல் பழிவாங்கலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை (Bail) கிடையாது. நீதிமன்ற விசாரணை இன்றி ஓராண்டு வரை சிறையில் அடைக்கலாம். கைது செய்யப்பட்டதற்கான காரணத்தைக்கூட அரசு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

சிறைச்சாலைக்குள் அரங்கேறிய சித்திரவதைகள்

சிறையில் அடைக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், கிரிமினல் குற்றவாளிகளை விடவும் மோசமாக நடத்தப்பட்டனர். வட இந்தியாவில் பீகார் சிறையில் இருந்த கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவில், ரத்த நாளங்களைப் பாதிக்கும் நச்சுத்தன்மை கொண்ட வேதித்துகள்கள் கலக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவர்களின் சிறுநீரகப் பாதிப்பிற்கு இந்த மிசா கால சித்திரவதைகளே காரணம் என அவரது உதவியாளர் ‘லாலு கி சபர்’ (அரசியலில் லாலுவின் பயணம்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பற்றி லாலுவிடம் கேட்டபோது, “அந்தக் கொடுமையான காலம் மனதை விட்டு அகலாது” என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் மிசா கொடுமைகளும் சிட்டிபாபுவின் தியாகமும்

தமிழ்நாட்டிலும் மிசா சட்டத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. அப்போதைய திமுக அரசின் முக்கிய தலைவர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் பல்வேறு  சிறைகளில்  அடைக்கப்பட்டனர். மிகக் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது சென்னை மத்திய சிறையில்தான்.

இந்த அநீதிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி எம்.எம். இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கை, சிறைக்குள் நடந்த ஜாலியன் வாலாபாக் போன்ற வன்முறையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

  • சிட்டிபாபுவின் டைரி குறிப்பு: முன்னாள் மேயரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்டிபாபு, சிறை அதிகாரிகளின் அடியிலிருந்து மு.க. ஸ்டாலின் போன்ற சக கைதிகளைக் காப்பாற்றத் தன் உடலை கேடயமாக மாற்றினார். அவரது டைரியில், “தடி அடிகள் கழுத்தில் விழுந்தபோது, அவை கொல்லன் உலையில் காய்ச்சிய இரும்பின் மீது விழும் சம்மட்டி அடிகளைப் போல் இருந்தன” என்று பதிவிட்டுள்ளார்.
  • ஆசிரியரின் நிலை: அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியரும் மிசா கொடுமையில் இருந்து தப்பவில்லை. மிசா சிறைக் கைதியாக இருக்கும் போது ஆசிரியரின் முகம் வீங்கும் அளவிற்கு கடுமையாகத் தாக்கப்பட்டார்.

சிறையில் நிகழ்ந்த இந்தத் தாக்குதல்களின் பாதிப்பாலேயே சிட்டிபாபு போன்ற தலைவர்கள் இளவயதிலேயே உயிரிழக்க நேரிட்டது.  இந்திய ஜனநாயகம் இன்று அனுபவிக்கும் சுதந்திரத்திற்குப் பின்னால், மிசா காலத்தின் ரத்தமும் கண்ணீரும் கலந்த தியாகங்கள் இருக்கின்றன. அந்த இருண்ட காலத்தை நினைவுகூர்வது, மீண்டும் அத்தகைய ஒரு நிலை வராமல் காப்பதற்கான எச்சரிக்கையாகும்.

ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளிட்டோர்
358 நாட்கள் சிறை வாசத்திற்குப்பின் விடுதலை பெற்ற நாள் இந்நாள்தான் (1977).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *