டெக்கான் கிரானிக்கல், சென்னை
* ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று கூடுகிறது கருநாடக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்த ஆளுநர் மறுப்பு. இதில் மாநில அரசு தயாரித்த ஆளுநரின் உரையில், ஒன்றிய அரசுக்கு எதிரான பல கூறுகள் இருந்ததால், ஆளுநர் உரை நிகழ்த்த மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது போல், ஆளுநர் பதவிக்கான அதிகாரம், கடமை குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்கிறது தலையங்கம்.
தி இந்து
* உ.பி.சங்கராச்சாரியாருக்கு வந்த சோதனை?: பத்ரிநாத்தில் உள்ள ஜோதிஷ் பீடத்தின் தலைவர் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதிக்கு, ‘சங்கராச்சாரியார்’ பட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக பிரயாக்ராஜ் மேளா ஆணையம் நோட்டீஸ்; நோட்டீசை திரும்பப் பெற வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என சரஸ்வதி பதில்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் வரம்பற்றது அல்ல, அது வெளிப்படையாக இருக்க வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு கருத்து.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ‘தர்க்க ரீதியான முரண்பாடு’, ‘வரைபடத்தில் இல்லாத’ வாக்காளர்கள் பெயர்களை ஜனவரி 24-க்குள் வெளிப்படுத்த வேண்டும்: மேற்குவங்க தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
* கூட்டாட்சி அமைப்புக்கு அச்சுறுத்தல்: கருநாடக முதல்வர் சித்தராமையா கண்டனம். கருநாடகா சிறப்பாக செயல்பட்டதற்காக தண்டிக்கப்படுகிறது; மத்திய வரிகளாக ஆண்டுதோறும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் பங்களித்தாலும், அதற்கு ஈடாக ஒரு ரூபாய்க்கு சுமார் 13 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது என சித்தராமையா பேச்சு.
தி டெலிகிராப்
* சிபிஅய் ஒப்புதல் இல்லாமல் ஊழல் வழக்குகளில் ஒன்றிய அரசு அதிகாரிகளை மாநிலங்கள் விசாரிக்கலாம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டைம்ஸ் ஆப் இந்தியா
* தலைவரை முதலில் நியமனம் செய்துவிட்டு தேர்தல் நடத்தும் பாஜக, காங்கிரஸ் சாடல். பிரதமர் மோடியின் ‘ அர்பன் நக்சல்கள்’ பேச்சுக்கு கண்டனம்.
– குடந்தை கருணா
