சென்னை, ஏப் 22 சூடான் நாட்டில் அதிகாரங்களை கைப்பற்றும் நோக்கில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு காணப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் வெடித்தது. அதிரடி ஆதரவு படைகள் என அழைக்கப்படும் துணை ராணுவத்தின் படைத்தளங் களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
சூடானில் இருக்கும் இந்தி யர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி இந்திய தூதரகம் அறிவுறுத் தியது. வீட்டிற்குள் பாதுகாப்புடன் இருக்கும்படியும், தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்து இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர் என்று வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் கூறுகையில், உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர்கள், இந்தியர்களை மீட்பது நமது கடமை, இது வரை 80 தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. “சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து ஒன்றிய அரசோடு பேசி வருகிறோம் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்