நாகர்கோவில், நவ. 6- குமரிமாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
கழக காப்பாளர் ஞா.பிரான் சிஸ், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு கழக மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஷ், செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், அமைப் பாளர் ம.தமிழ்மதி, மாநகர செய லாளர் மு.இராஜசேகர், துணைத் தலைவர் கவிஞர் ஹ.செய்க்முகமது பகுத்தறிவாளர்கழக மாவட்ட செயலாளர் எம்.பெரியார் தாஸ், துணைச் செயலாளர் சி.மகா ராஜன், கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க.யுவான்ஸ் தோழர்கள் மு.குமரிச்செல்வர், கு. சந்திரன் மற்றும் பலரும் பங்கேற்று உரையாற்றினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திராவிடர்கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடைய 91ஆவது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண் டாடுவது, விழிக்கொடை, உடற் கொடை, பொதுமக்களுக்கு இனிப் புகள் இயக்க நூல்கள் வழங்கி மனிதநேய பெருவிழாவாகக் கொண் டாடுவது எனவும், தெருமுனைக் கூட்டங்கள், பரப்புரை கூட்டங்கள் நடத்தி பிரச்சாரப் பெருவிழாவாகக் கொண்டாடுவது எனவும், கன்னி யாகுமரியில் திருவள்ளுவருடைய சிலை போன்று தந்தை பெரியா ருடைய பெயரில் நினைவு மண்ட பம் போன்ற சிறந்த நினைவுச்சின் னம் அமைக்க தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்வது , சுசீந்திரத்தில் மீண்டும் தமிழ் அறிஞர் கவிமணி அவர்களுடைய சிலையை பழைய இடத்திலே நிறுவ மாவட்ட நிர்வா கத்தைக் கேட்டுக்கொள்வது, இயக்க இதழ்களான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசன லிஸ்ட் போன்ற இதழ்களுக்கு சந் தாக்கள் சேர்ப்பது என தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.