மாவட்ட தலைவர் ஆசிரியர் நல்லதம்பி, புகழேந்தி வெங்கடாசலபதி, எழிலன் கண்ணையன், ஆனந்தன், விடுதலை ஆதவன் மற்றும் கழகத் தோழர்கள் பெரியார் உலகத்திற்கு நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

சுயமரியாதைச் சுடரொளிகள் சிவகாசி வானவில் மணி, கோமதியம்மாள், இலட்சுமியம்மாள் ஆகியோரின் படங்களை கழகத் தலைவர் திறந்து வைத்தார். உடன்: மாவட்டத் தலைவர் நல்லதம்பி, ஆதவன், இல.திருப்பதி, தி.மு.க. நகரச் செயலாளர் ஆர்.எஸ்.ஆர்.எஸ்.மாதவன், உரத்தநாடு இரா. குணசேகரன், பெரியார் செல்வன்.

நாகர்கோயில் துணை மேயர் மேரி பிரின்சி லதா தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். (22.1.2026)

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார்-ஜெகதாராணி, ஜெ.ஜெ.கவின், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றி குமார் ஆகியோர் கவுசல்யா நினைவு கவின் – காவியா இல்ல அறிமுக விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தனர் (திருச்சி, 21.01.2026)

மல்லிகா பொன். முத்துராமலிங்கம் இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவரை பயனாடை அணிவித்து வரவேற்றார்.
