பெங்களுரு ஏப் 22 மழை நின்ற போதும் ரபோதிய கூட்டம் இல்லாத காரணத்தால் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேரணி ரத்து செய்யப் பட்டுள்ளது. கருநாடகாவில் தற் போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதல மைச்சராக பசவராஜ் பொம்மை ஆட்சி செய்து வருகிறார். 224 உறுப் பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளதை அடுத்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசி யல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
கருநாடக மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், தேசிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப் பாக நேற்று (21.4.2023) அமித்ஷா பெங்களூரு நகரில் உள்ள தேவன ஹள்ளி தொகுதியில் பிரம்மாண்ட பேரணி நடத்துவார் என்று அறிவிக் கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மாலை அமித்ஷா பேரணிக்கு முன் சுமார் அரை மணி நேரம் கனமழை குறுக்கிட்டது. இதனால் அமித்ஷா பேரணி ரத்து செய்யப் படுவதாக பாஜக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மழை நின்ற போதும் பேரணி நடை பெறவில்லை. போதுமான கூட்டம் இல்லாத காரணத்தால் அமித்ஷா கோபத்தில் பேரணியை ரத்து செய்துவிட்டு திரும்பிச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.