ஒரே நாளில் 17 மசோதாக்கள் நிறைவேற்றம்

2 Min Read

சென்னை,ஏப்.22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

சில மசோதாக்களுக்கு பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வேலை நேர திருத்தம் போன்ற மசோதாக்களுக்கு திமுக கூட்ட ணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் பெரும்பான்மை பலம் காரணமாக, சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவை கடந்த மார்ச் 20-இல் தொடங்கியது. நிதிநிலை அறிக்கை, அதன்பிறகு துறை வாரியாக மானி யக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப் பட்டன. கூட்டத்தொடரில் 17 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உயர்கல்வி, வருவாய், சட்டம், நகராட்சி நிர்வாகம், கால்நடை, மீன்வளம், வணிகவரிகள் மற்றும் பதிவு, நிதி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மசோதாக்களைத் தாக்கல் செய்தனர்.

ஒவ்வொரு மசோதாவும் பிரிவு வாரியாக ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்பின்பு, மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. ஆளும் கட்சிக்கான பெரும்பான்மை காரணமாக மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேறின. மொத்தமாக 17 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?

சென்னை,ஏப்.22- தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (21.4.2023) காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது:- 

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதைப் பொறுத்தவரையில், போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது யார் ஆட்சியில் என்பதையும், அதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப் பட்டது எந்த ஆட்சியில் என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார் கள். அதைப் பற்றியெல்லாம் விளக்கமாக பேசி, மீண்டும் ஒருமுறை விவாதத்திற்குள் செல்ல நான் விரும்பவில்லை.

ஆனால், 20.4.2023 அன்று இந்த அவையில் எதிர்க் கட்சி தலைவர், ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டைப் பற்றி பேசினார். 

நான் ஒரே ஒரு கேள்விமட்டும் எழுப்ப விரும்புகிறேன். அறையில் இருந்து அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பார்கள். எனவே, அந்த உரிமையோடு அவர்களை கேட்க விரும் புகிறேன். 100 நாட்கள் அமைதியாக நடந்த அந்த போராட் டத்தில் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் சொல்லவே மாட்டேன் என்கிறார். 

முதலமைச்சராக இருந்தபோதும் சொல்ல விரும்ப வில்லை. இப்போது எதிர்க்கட்சி தலைவர் ஆன பின்பும் அவர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நமது அரசைப் பொறுத்தவரை, துப்பாக்கி சூடு சம்பவங்களில் பொது மக்கள் ஒருவர் கூட உயிரிழக்காதவாறு சட்டம்-ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுவருகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *