


‘இந்திய வரலாற்றை திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல்’ ‘சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா’ மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கை வரலாற்றுத் துறை, ‘லேடி டோக்’ பெருமாட்டி கல்லூரி, மதுரை மற்றும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம், சென்னை ஆகியவை இணைந்து நடத்தியது. இந்த கருத்தரங்கைபெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் முனைவர் கி. வீரமணி அவர்கள் தொடங்கி வைத்துப் பேசினார். அவருக்கு லேடி டோக் கல்லூரியின் முதல்வரும், செயலாளருமான முனைவர் பியூலா ஜெயசிறீ பயனாடை அணிவித்தும், நினைவுப் பரிசினை வழங்கியும் சிறப்பு செய்தார். உடன் மேனாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம், திராவிட வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணை தலைவர் அ.கருணாநந்தம், முனைவர் தேன்மொழி, வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் ஜெசி ரஞ்சிதா, ஜெப செல்வி, முனைவர் மெர்சி பாக்கியம் ஆகியோர் இருந்தனர். மேலும் பேராசிரியர் பெருமக்களும், மாணவ – மாணவிகளும் ஏராளமானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர். (மதுரை, 21.1.2026)
