வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்தியா எப்போதும் எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது பரூக் அப்துல்லா பேட்டி.

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சிறீநகர், ஜன. 21- ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று (19.1.2026) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாலிவுட்டில் தனக்கு பட வாய்ப்புகள் குறைந்ததற்கு மதம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்தபோது பரூக் அப்துல்லா கூறியதாவது;-

“கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் வெறுப்புத் தீ மூண்டு, தேர்தல் காரணங்களுக்காக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வேண்டுமென்றே பிரிவினை உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது. அனைத்து மத மக்களும் ஒன்றாக வாழும் வேற்றுமையில் ஒற்றுமைக்கு இந்தியா எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகிறது. சில தனிநபர்கள் மதத்தின் பெயரால் பிளவுகளை தூண்ட நினைத்தால், அதைத் தடுப்பது சவாலானது.

ஆனால் இதுபோன்ற விசயங்கள் நமக்கு புதிதல்ல. ஜம்முவில் வெறுப்பை பரப்புவது யார்? ஜம்முவை பிரிக்க முழக்கங்களை எழுப்புவது யார்? அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? மதத்திற்காக யார் போராடுகிறார்கள்? காந்தியை கொன்றவனுக்கு யார் கோயில் கட்டுகிறார்கள்? நாங்கள் பாகிஸ் தானுக்கு எதிராக போராடியுள்ளோம்.

நாங்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பியிருந்தால், 1947ஆம் ஆண்டிலேயே அவ்வாறு செய்திருப்போம். ஆனால் நாங்கள் இந்தியாவில் தங்கினோம்.

நாங்கள் காந்தியின் இந்தியாவில் இருந்தோம். இன்றைய இந்தியா இனி காந்தியின் இந்தியாவைப் போல் இல்லை. மக்கள் இப்போது கஷ்டத்தை உணர்கிறார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *