அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர், ஜன.21- அ.தி.மு.க.வின் தோ்தல் அறிக்கையை மக்கள் யாரும் நம்பவில்லை என்று அமைச்சா் கே.என்.நேரு கூறினார்.

தஞ்சாவூரில் 19.1.2026 அன்று நடைபெற்ற மறைந்த திமுக மூத்த நிா்வாகியும், முன்னாள் சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினருமான எல்.கணேசன் படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக மிகவும் கஷ்டப்பட்டு தயாரித்த தோ்தல் அறிக்கையை அப்படியே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளாா்.

நாங்கள் பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம் எனக் கூறியதை, அவா் ஆண்களுக்கு இலவசப் பயணம் எனக் கூறுகிறாா்.

பெண்களுக்கு ரூ.2 ஆயிரம்

பெண்களுக்கு மாதம் ரூ.1,000 பணம் கொடுக்க முடியாது என்றும், இதற்கான பணம் எங்கு இருக்கிறது எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினாா். இப்போது, அவா் பெண்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் பணம் கொடுப்போம் எனக் கூறி வருகிறாா்.

எனவே, அவரது தோ்தல் அறிக்கையில் புதுமை ஒன்றுமில்லை. அவருடைய தோ்தல் அறிக்கையை மக்கள் யாரும் நம்பவில்லை. இதை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள் என்பதால், நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ஜன. 26ஆம் தேதி நடைபெறும் திமுக மண்டல மகளிரணி மாநாட்டுக்கு 1.50 லட்சம் போ் வருவா் என எதிா்பாா்க்கிறோம். இதற்காக பேருந்துகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, எல்.கணேசன் படத்தை அமைச்சா் நேரு திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலருமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் முன்னாள் ஒன்றிய இணை அமைச்சா் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினா்கள் எஸ்.கல்யாணசுந்தரம், ச.முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் க.அன்பழகன், டி.கே.ஜி.நீலமேகம், க.அண்ணாதுரை, என்.அசோக்குமாா், நிவேதா முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

அய்யப்பன் கோயில் திருட்டு சந்தி சிரிக்கிறது

21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை, ஜன. 21- சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு  கேரளா உள்ளிட்ட 21 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.

சபரிமலை கோயிலில் சுமார் 4 கிலோ தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கில் இதுவரை உன்னிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர்கள் வாசு, பத்மகுமார், நிர்வாக அதிகாரிகள் முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் தந்திரி கண்டரரு ராஜீவரரு, சென்னை நகை தயாரிப்பு நிறுவன சிஇஓ பங்கஜ் பண்டாரி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தங்கத் தகடு திருட்டில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையும் விசாரித்தது. அதன்படி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு, கேரளா, கருநாடகாவில் 21 இடங்களில் அமலாக்கத் துறை நேற்று (20.1.2026) சோதனையில் ஈடுபட்டது.

சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை, வேப்பேரி, சவுக்கார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

 

டிரம்பின் கைங்கர்யம்

இந்திய பங்குச் சந்தையில்
ஒரே நாளில் 1066 புள்ளிகள் சரிவு

ரூ. 10 லட்சம் கோடி இழப்பு

மும்பை, ஜன. 21- கிரீன்லாந்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் அய்ரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அறிவிப்பு பன்னாட்டு சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் எதிரொலியாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்று வெளியேறி வருகின்றனர்.

நேற்றைய (20.1.2026) வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் (1.28%) சரிந்து 82,180.47 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 353 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,232 புள்ளிகளில் நிலைபெற்றது.

எட்டர்னல், பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா, இன்டர்குளோப் ஏவியேஷன், டிரென்ட், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. எச்டிஎப்சி வங்கிப் பங்கு மட்டும் ஏற்றம் கண்டது. நேற்று ஒரே நாளில் மட்டும் முதலீட்டா ளர்களுக்கு ரூ.9.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *