புதுவை, ஏப். 22- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 59-ஆவது நினைவு நாளில் திராவிடர் கழகம் சார்பில் 21-.4.20-23 காலை 9.30 மணிக்கு புதுச்சேரி பாப்பாம்மாள் கோயில் இடுகாட்டில் அமைந்துள்ள நினைவு மண்டபத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
கழக மண்டலக் காப்பாளர் இரா.சடகோபன், மண்டலத் தலைவர் வே.அன்பரசன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் கே.மு.தமிழ்ச்செல்வம், இளைஞரணி தலைவர் தி.இராசா, களஞ்சியம் வெங்கடேசன், ஆ.சிவராசன், பெ.ஆதிநாராயணன், தமிழ்நெஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.