கல்லக்குறிச்சி, ஏப். 22- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம்; பகுத் தறிவாளர் கழகம்; திராவிடர் கழக இளைஞரணி; திராவிட மாணவர் கழகம் சார்பாக கலந் துரையாடல் கூட்டம் 15.4.2023, சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, கல்லக்குறிச்சி நேபால் தெருவிலுள்ள வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். மாநில மருத்துவரணி செயலாளர் மருத்துவர் கோ.சா. குமார், மாவட்டச் செயலாளர் ச.சுந்தரராஜன், மாவட்ட அமைப்பாளர் த.பெரியசாமி, மாவட்ட இளைஞரணித் தலை வர் அ.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட் டப் பகுத்தறிவாளர் கழகச் செய லாளர் வீர முருகேசன் வரவேற் புரையாற்றினார்.
கூட்டத்தில் உளுந்தூர்பேட் டையில் 27.3.2023 அன்று நடைபெற்ற ‘சமூக நீதி பாது காப்பு மற்றும் திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டத்தின் வரவு-செலவு கணக்கை உளுந் தூர்பேட்டை ஒன்றிய தலைவர் செல்வ சக்திவேல் படித்தார்.
கல்லக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப் பிரச்சாரம் கழக சொற் பொழிவாளர்களைக் கொண்டு நடத்துதல், திராவிட இயக்க ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, திராவிடப் பொழில், தி மாடர்ன் ரேசனஸ்ட் முதலியவற்றிற்கு சந்தா சேகரித் தல், கழகத்திற்கு புதிய உறுப்பி னர்களைச் சேர்த்தல் ஆகிய பொருள் பற்றி மண்டலத்தலை வர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ் கர் மாநில மருத்துவரணிச் செய லாளர் மருத்துவர் கோ.சா.குமார், மாவட்ட மகளிரணித் தலைவர் பழனியம்மாள் கூத்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் கே. முத்துவேல் ஆகியோர் கருத்து ரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக சோழிங்கநல் லூர் கழக மாவட்ட அமைப்பா ளர் குழ.செல்வராசு கலந்து கொண்டார். மேலும் கல்லக் குறிச்சி நகர செயலாளர் நா. பெரியார், மாவட்ட திராவிட மாணவர் கழக துணைத்தலைவர் திராவிட சசி, சங்கராபுரம் ஒன் றிய திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மா.ஏழுமலை, மூரார்பாளையம் கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி, செல்வ தீலிபன், செ.செல்வராசு, பெ.துரைராஜ் உள்பட பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண் டனர். இறுதியாக கல்லக்குறிச்சி நகர திராவிடர் கழகத் தலைவர்
இரா. முத்துச்சாமி நன்றி கூறினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :-
1)உளுந்தூர்பேட்டை யில் “சமூகநீதி பாதுகாப்பு, திரா விட மாடல் பொதுக்கூட்டம் நடத்த இசைவு தந்த தமிழர் தலைவருக்கு நன்றி பாராட்டியும் கூட்டம் சிறப்பாக நடைபெற நன்கொடை மற்றும் ஒத்து ழைப்பு தந்த கழகப் பொறுப்பா ளர்கள், இயக்கப்பற்றாளர்கள், வணிகப் பெருமக்கள் திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப் பாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறி தீர்மானம் நிறைவேற் றப்படுகிறது.
2)6.5.2023 அன்று சனிக் கிழமை ஒருநாள் கல்லக்குறிச்சி மாவட்டம் சார்பாக, கோமுகி அணை வளாகத்தில் பயிற்சி முகாம் நடத்துவது என தீர் மானம் நிறைவேற்றப்படுகிறது.
3)திராவிட ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றிற்கு சந்தாக்கள் சேகரித்தும், புதிய உறுப்பினர்கள் பட்டியலையும் 29.4.2023 அன்று ஈரோட்டில் நடைபெறும் திரா விடர் கழகப் பொதுக்குழுவில் சமர்ப்பிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.