அப்பியம்பேட்டை, ஜன. 20– 15.1.2026 அன்று காலை 9 மணி முதல் கடலூர் மாவட்ட கழக இளைஞர் அணித் தலைவர் உதய சங்கர் தோட்டத்தில் தமிழர் திருநாள் திராவிடர் பெருநாள் மகளிர் அணி பொறுப்பாளர் சத்தியவதி தலைமையில் நடைபெற்றது
மாவட்ட மகளிர் அணித் தலைவர் குணசுந்தரி வரவேற்புரை ஆற்றினார். லட்சுமி, செல்வராணி, மலர், முத்து, கலைச்செல்வி முதலான மகளிர் அணி தோழியர்கள் வாசலில் பொங்கலிட்டு பொங்கலோ பொங்கல் என முழக்க மிட்டு சர்க்கரைப் பொங்கலை மக்களுக்கு வழங்கினர்
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மற்றும் குவைத் அயலக அணி திமுக பொறுப்பாளர் தியாகராஜன் தமிழர் திருநாள் சிறப்பு குறித்தும் தந்தை பெரியாரின் பொங்கல் விழா மாட்சிமை பெற்ற வரலாறு குறித்தும் சிறப்புரையாற்றினர் மற்றும் வடலூர் முத்தை யன், வடலூர் நகர கழகச் செயலாளர் குண சேகரன், சேப்ளா நத்தம் வரதராஜன், திமுக கிளை கழகச் செயலாளர் தட்சிணாமூர்த்தி கட்டியங்குப்பம் மேனாள் ஊராட்சித் தலைவர் முத்துலிங்கம் குறிஞ்சிப்பாடி கழகத் தலைவர் கனகராஜ் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேனாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கோ. வேலு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் உதயசங்கர்
நிகழ்வை ஒருங்கிணைத் தனர் அப்பியம்பேட்டை தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அறிவுச்செல்வன் நன்றி கூறினார்.
