சேலம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம்
“பெரியார் உலக”த்திற்கு ரூ.20 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க முடிவு
சேலம், ஜன. 20– சேலத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் ரூ 20 இலட்சத்திற்கும் மேலாக நிதி வழங்க சேலம் மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துரையாடலில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
சேலம் மாவட்ட கழகக் கலந்துரை யாடல் கூட்டம் தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நூற்றாண்டு நினைவு நிறைவு மண்டபத்தில் 18-01-2026 மாலை 4:00 மணிக்கு சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜூ தலைமையில் நடைபெற்றது. ஆட்டையாம்பட்டி காளியப்பன் கடவுள் மறுப்புக் கூற கூட்டம் தொடங்கியது
சேலம் மாவட்டச் செயலாளர் மூனாங்கரடு பெ.சரவணன் வறவேற்புரை ஆற்றினார். அவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 06-02-2026 அன்று சேலம் வருகைக்கான பகுதி வாரியாக, மண்டல வாரியாக செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஏற்பாடுகள், நிதி வசூல் மற்றைய கூட்டத்திற்கான அமைப்புகள் அமைப்பது குறித்தும் விரிவாக பேசினார்.
திட்டங்களை வகுத்தல், அமைச்சர் பெருமகனார், அரசியல் அமைப்புகள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், நாம் அனுக வேண்டியவர்களைப் பற்றி மாவட்டக் கழகத் தலைவர் வீரமணி ராஜூ விளக்கமாக பேசினார்.
மாநில மகளிரணி துணைச் செயலா ளர் ப. காயத்ரி மகளிர் பாசறை, மகளிர் அணி மாணவர் கழகம், இளைஞர் அணி ஆகியோர் இணைந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எடைக்கு எடை நாணயங்கள் வழங்குவது குறித்தும் அதற்காக தெரு வசூல் கடை வசூல் செய்து தேவையான தொகையை ஈட்டுவது குறித்தும் பேசினார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஊ.ஜெயராமன் கூட்டங்கள் நடத்தும் முறைகளையும் அதற்குண்டான நிதி நிலையை உயர்த்துவது குறித்தும் பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவது குறித்தும் பகுதி கிளைக் கழகங்கள் அமைப்பதின் அவசியங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
சிறப்பு அழைப்பாளர் மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு சேலம் மாவட்ட தோழர்களுக்கு ஆக்க வேலைகள் ஆற்ற ஊக்கமளித்து பேசினார். ஏற்கனவே அமைக்கப்பட்ட நிதிக் குழுக்கள் தத்தம் அறிக்கைகளை வாசித்தனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
- ‘பெரியார் உலக மயம் உலகம் பெரியார் மயம்’ – பெரியார் உலகத்திற்கு சேலம் மாவட்டத்திலிருந்து ரூ.20 இலட்சத்திற்கும் மேல் நிதி திரட்டிக் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
- திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அ. அருள்மொழிக்கு ‘ தந்தை பெரியார் விருது ‘ கிடைத்தமைக்கு சேலம் மாவட்ட திராவிடர் கழகம் வாழ்த்து தெரிவிக்கிறது. மேலும் மகளிரணி, மகளிர் பாசறை சார்பாக பாராட்டு விழா நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது. விருது வழங்கி சிறப்பித்த திராவிட மாடல் ஆட்சி தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
- “சேலம் மாவட்ட திராவிடர் கழகம் ” என்று ஒரு ‘வாட்ஸ்-ஆப்’ குழு தான் செயல்பட வேண்டும் அதற்கு அட்மின்ஸ் மாவட்ட கழகத் தலைவர் மாவட்டச் செயலாளர் மாவட்டத் துணைத் தலைவர்கள், துணைச் செயலாளர்கள் மேலும், திராவிடர் கழகத் தலைவர் திராவிடர் கழகத் துணைத் தலைவர் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் மட்டுமே இருக்க வேண்டும். இதில் கழகச் செய்திக் கழக அறிவிப்புக்கள் மட்டுமே வரவேண்டும் இதில் திராவிடர் கழகத்தின் அணைத்து அணிகளும் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் பொறுப்பாளர்களும் தோழர்களும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். ” SALEM DISTRICT DRAVIDAR KAZHA GAM ” என்று பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆங்கிலத்தில் இட்ட பெயரும் தொடர வேண்டும் எனவும் தீர்மாணிக்கப்படுகிறது.
- அயோத்தியாப்பட்டினம் ஒன்றிய கழக நிதிக்குழு மருத்துவர் என்.ராஜேந்திரன், துரை.சக்திவேல், கமலம் அம்மாள், அ.ராஜா ரூ.45500/= வசூல் செய்து தலைமைக்கு அனுப்பியதற்கு பாராட்டுதலை தெரிவிக்கிறது.
- மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன் அயோத்தியாப்பட்டின ஒன்றியக் கழகம் மற்றும் வீரபாண்டி ஒன்றியக் கழகம் நிர்வாகிகளை அறிவித்தார்.
அயோத்தியாப்பட்டினம்
ஒன்றியக் கழகம்
தலைவர்-மருத்துவர் என்.ராஜேந்திரன்
செயலாளர் – அ. ராஜா
துணைத் தலைவர் – ப.கு. மாதேஷ்வரன்
வீரபாண்டி ஒன்றியக் கழகம்
தலைவர் – ஜெ. காளியப்பன்
செயலாளர் – உல. அண்ணாதுரை
துணைத் தலைவர் – துரை.நாகராஜ்
துணைச் செயலாளர் – உல. கருணா நிதி
துணைச் செயலாளர் – ப. கிருஷ்ண மூர்த்தி
தோழர் கி.சிந்தனை அறிவு (V.201601758) ரூ.2000/= கொடுத்து விடுதலை நாளிதழ் ஓராண்டு சந்தாவை புதுப்பித்தார்.
கலந்து கொண்டு சிறப்பித்த தோழர்கள்
மாவட்ட துணைத்தலைவர் சு. இமயவரம்பன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் வேல் சோ அசோகன், சூரமங்கலம் பகுதி தலைவர் பழ. பரமசிவம், அம்மாப்பேட்டை பகுதி தலைவர் இயக்குநர் குமாரதாஸ், அயோத்தியாப்பட்டினம் ஒன்றியச் செயலாளர் அ.ராஜா, மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் தரை சக்திவேல், ஆட்டையாம்பட்டி ஜெ.காளியப்பன், வழக்குரைஞர் ஆர்.செல்வகுமார், அஸ்தம்பட்டி என். செல்வகுமார், மருத்துவர் என்.இராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் அ.இ.தமிழர் தலைவர், மேனாள் மாவட்டத் தலைவர் அ.ச.இளவழகன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் துரை.சக்திவேல் நன்றியுரை கூற கூட்டம் இனிதே முடிந்தது.
