சென்னை, ஏப். 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் உறுப்பினர் ஜோசப் சாமுவேல் அம்பத்தூர் தொகுதி பற்றி கேட்ட கேள்விக்கு, அம்பத் தூர் தொகுதியில் நகர்ப்புற நல் வாழ்வு மய்யம் அமைக்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தமிழ் நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஏற்கெனவே கடந்த ஆண்டு இதே மன்றத்தில் விதி 110இன் கீழ் 708 நகர்புற நலவாழ்வு மய்யங்கள் அமைக்கப்படும் என்று அறிவித் திருக்கிறார்கள். அதில் சென்னை மாநகரைப் பொறுத்தவரை 200 வட்டங்களுக்கு 200ம், மற்ற மாநக ராட்சிகள் மற்றும் 63 நகராட்சி களுக்கு என மொத்தம் 708 மருத் துவமனைகள் அனுமதிக்கப்பட்டி ருக்கின்றன.
இந்தவகையில் சென்னைக் கென்று 200 அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இதுவரை 191 இடங்களில் பெருநகர சென்னை மாநகராட்சி இடம் தேர்வு செய்து, 140 இடங்களில் மருத்துவமனை கட்டும் பணி முழு நிறைவு பெற்றி ருக்கிறது. அந்த வகையில் அம்பத் தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பாடி, அத்தி பேட்டை, கொரட்டூர், முகப்பேர் மேற்கு, முகப்பேர் கிழக்கு, ஒரகடம், வரதராஜபுரம், வெங்கடாபுரம் உள்பட 9 இடங் களில் ஏறத்தாழ தலா 25 இலட்சம் ரூபாய் மதிப் பீட்டில் 2.25 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைகள் கட்டும் பணி கள் நிறைவுற்றிருக் கிறது.
பெருநகர சென்னை மாநகராட் சியின் சார்பில், 140 மருத்துவர்கள், 140 செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் 140 பேர், 140 உதவி ஆய்வாளர்கள் பணி நியமனங்கள் தற்போது செய்து கொண்டிருக் கிறார்கள். மிக விரைவில் அந்தப் பணி நியமனங்கள் முடிவுற்றவுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர் களால், 140 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் சென்னையிலும், 450க்கும் மேற்பட்ட நகர்ப் புற நலவாழ்வு மய்யங்கள், ஒட்டு மொத்த தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் திறந்து வைக்கப்பட இருக்கிறது. அன்றைக்கு அம்பத் தூர் தொகுதியிலும் 9 மருத்துவ மனைகள் புதிதாக அமைய இருக் கிறது. இந்த 9 மருத்துவமனைகள் அம்பத்தூர் தொகுதியில் வருகிறது என்றாலும், கூடுதலாக நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் என்பது, சென்னை மாநகர் போன்ற இடங்களில் அமைய வேண்டியதன் அவசியம் இருக்கிறது.
குறிப்பாக அம்பத்தூரைப் பொறுத்தவரை, சட்டமன்ற உறுப் பினர் ஏற்கெனவே எடுத்துச் சொன்ன தொழிலாளர்கள் அதி கம் பேர் வசித்துக் கொண்டிருக்கிற பகுதி என்பதால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களுடைய அறிவுறுத்தலைப் பெற்று, எதிர் வரும் நிதியாண்டில் ஒன்றிய அர சின் அனுமதியினைப் பெற்று, நகர்ப்புற நல வாழ்வு மய்யம் ஒன்று அம்பத்தூர் பகுதியில் வருகிற நிதி யாண்டுகளில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உரையாற்றினார்.