சென்னை, ஏப். 22- தமிழ்நாடு சட்டப் பேரவையில் 20.4.2023 அன்று உறுப்பினர் கேள்விக்குப் பதில ளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி “தமிழ் நாடு முதலமைச்சர் எடுத்திருக் கின்ற நடவடிக்கைகளின் காரண மாக இந்த 2 ஆண்டுகளில் மாண வர் சேர்க்கை எண்ணிக்கை 1,20,090 ஆக உயர்ந்திருக்கிறது” என்று குறிப் பிட்டார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி கூறியதாவது:-
தலைவர் கலைஞர் அவர்களு டைய ஆட்சியில் 1,16,687 பேர் மொத்தம் தமிழ்நாட்டில் பாலி டெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்தி ருந்தார்கள். ஆனால், அது பத்து ஆண்டுகளில் குறைந்து, 2020-2021இல் 59,350 ஆக குறைந்துள் ளது. அதை அதிகரிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு தான், முதலமைச்சர் ‘நான் முதல்வன்’ திட்டத்தை அறிவித்து, புதுமைப்பெண் திட்டத்தை அறிவித்தன் விளைவாக இப்போது மீண்டும் அது, இந்த இரண்டு ஆண்டுகளில், 1,20,090 ஆக உயர்ந் திருக்கிறது. கிட்டத்தட்ட 60 ஆயி ரம், 70 ஆயிரம் பேர் சேர்ந்திருக் கிறார்கள்.
ஆகவே, முதலமைச்சர் எடுக் கின்ற நடவடிக்கைகளின் காரண மாக, இதுமட் டுமல்ல, அதேபோல 4.0 தரத்திற்கு தொழில் துறையி னுடைய தரத்திற்கேற்ப பாலிடெக் னிக் கல்லூரிகளை வளர்க்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, தொழிற்சாலைகளோடு சேர்ந்து செயல்படவேண்டும் என்று முத லமைச்சர் ஆணையிட்டிருக்கின்ற ஆணையின் அடிப்படையில் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
ஆகவே, வருங்காலங்களில், அதுவும் ஒரு கல்லூரி ஆரம்பிக்க வேண்டுமென்று சொன்னால், கிட்டத்தட்ட 54 அரசுபாலிடெக் னிக்குகளுக்கு 418 கோடி ரூபாய் செலவாகிறது. ஆகவே, நிதிநிலை யையும் பொறுத்து, அங்கே மாண வர்கள் மற்ற சேருகின்ற எண்ணி கையையும் பொறுத்து, உங்களு டைய கோரிக்கை வருங்காலத்தில் முதலமைச்சரிடம் சொல்லி, பரி சீலிக்கப்படும். இவ்வாறு அமைச் சர் க.பொன்முடி பதிலளித்தார்.