சென்னை, ஏப். 22- தமிழ்நாட்டில் ஒரே நாளில் அதிகபட்சமாக 41.82 கோடி யூனிட்கள் மின்சாரம் நுகர்வு செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் மின்நுகர்வோர் கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினமும் மின்தேவை சராசரியாக 15,000 மெகாவாட் என்ற அளவில் உள்ளது.
இதில், விவசாயத்தின் பங்கு 2,500மெகாவாட் என்ற அளவாக உள்ளது. இது கோடைக் காலத் தில் 16,000 மெகா வாட் என்ற அளவுக்கு அதிகரித்தும், குளிர் காலத்தில் 12,000 மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும் காணப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டுக் கான கோடை காலம் தொடங்கி விட்டதால் மின்சாதன பொருள் களின் பயன் பாடும் அதிகரித் துள்ளது. இதனால், தினமும் மின்தேவை 16,000 மெகாவாட் என்ற அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மேலும், விவசாய பிரிவுக்கு கூடுதலாக கூடுதலாக 727 மெகாவாட் செலவிடப்படுகிறது.
இத்தகைய காரணங்களால், மார்ச் 4-ஆம் தேதி தினசரி மின் தேவை முதல் முறையாக 17,584 மெகா வாட்டை எட்டியது. இதற்கு முன் கடந்த 29.4.2022இல் 17,563 மெகாவாட் என்பதே சாதனை அளவாக இருந்தது. விவசாயத்துக்கான 18 மணி நேர மின்விநியோகம் மற்றும் பள்ளி களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருவதால் மின்பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், முன் எப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15ஆம் தேதி மின்தேவை 17,647 மெகாவாட்டை எட்டியது. ஆனால், அதற்கு அடுத்த நாள் 16-ஆம் தேதி, மின்நுகர்வு 18,053 மெகாவாட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது.
இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் 20.4.2023 அன்று வெளியிட்ட பதி வில், “வரலாற்றில் முதல்முறையாக, ஏப்.19 தமிழ்நாட்டில் மின் நுகர்வு அதிகபட்சமாக 41.82கோடி யூனிட்கள், அதா வது 19,087 மெகாவாட் மின்சாரம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந் தைய உச்சபட்ச நுகர்வு ஏப்.18 ஆம் தேதி 41.30 கோடி யூனிட்கள், அதாவது 18,882 மெகாவாட்” எனப் பதிவிட்டுள்ளார்.
ராகுல்காந்தி பதவி பறிப்பு
சூரத் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – காங்கிரஸ் அறிவிப்பு
சூரத், ஏப். 22- சூரத் நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு சூரத் செசன்ஸ் நீதிமன்றம் தடை விதிக்க 20.4.2023 அன்று மறுத்து விட்டது.
இதையொட்டி காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மூத்த வழக்குரைருமான அபிஷேக் சிங்வி, டில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சூரத் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு தவறானது, சட்டத்தின் அனைத்து அடிப்படை அம்சங்களுக்கும் முரணானது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர்நீதி மன்றத்தில் விரைவில் மேல்முறையீடு செய்வோம். தீர்ப் பில் சட்டத்தவறு உள்ளது. நாங்கள் எல்லா நீதிமன்றங்களை யும் மதிக்கிறோம். நாங்கள் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தையும் பெற்றிருக்கிறோம். அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு பல அடிப்படை அம்சங்கள் இருக் கின்றன. இவ்வாறு அவர் கூறினார். குஜராத் உயர்நீதிமன் றத்தில் மேல்முறையீடு செய்கிறபோது, ராகுல் தரப்பில் சிங்வி ஆஜராகி வாதாடுவார் என தகவல்கள் கூறுகின்றன.