மறைந்த பேராசிரியர் க.நெடுஞ்செழியனின் வாழ்விணையர் திருச்சி, கலைஞர் கருணாநிதி நகர், இராசாராம் சாலையை சேர்ந்த பேராசிரியர் சக்குபாய் நெடுஞ்செழியன் (வயது 82) உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று (18.1.2026) இரவு மறைவுற்றார். தகவலறிந்து திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் அம்பிகா கணேசன், ஒன்றிய கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் சங்கிலிமுத்து, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மலர்மன்னன், பொதுக்குழு உறுப்பினர் சி.கனகராசன், பெல் ஆறுமுகம், செந்தமிழினியன் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். அவரது உடல் அடக்கம் இன்று (ஜன.19) மாலை இலால்குடியை அடுத்துள்ள அன்பில் படுகை கிராமத்தில் நடைபெற்றது.

அம்மையாருக்கு நெ.ச.நகைமுத்து என்ற மகள் உள்ளார். நெ.ச.குறிஞ்சி என்ற மகன் ஏற்கெனவே இறந்து விட்டார். மறைந்த அம்மையார் சக்குபாய் அவர்கள் திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.
