சென்னை, ஜன. 19- கோவிலில் விளக் கேற்றும்போது, புடவையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாபமாக உயிர் இழந்தார்.
கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி, 70. இவர், நேற்று முன்தினம் இரவு தன் உறவினர் ஜெயந்தியுடன், கோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில் உள்ள பாரதீஸ்வரர் சிவன் கோவிலுக்கு சென்றார்.
அங்கு, அகல் விளக்கேற்றும்போது, விளக்கில் இருந்து தீ அவரது சேலையில் பரவியது.
இதில், சாந்தியின் இரு கால்கள் மற்றும் கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடபழனி போலீசார் விசாரிக்கின்றனர்.
