டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* “இந்திய மொழிகளில் தலைசிறந்த இலக்கிய படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன் ஆண்டு தோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
* ரிசர்வ் வங்கி, நபார்டு வேலை வாய்ப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டில் அநீதி; பி.வில்சன் எம்.பி. கண்டனம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மக்களை பிரித்தாள்வதில் பிரிட்டிஷாரை விட பாஜகவினர் ஆபத்தானவர்கள், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் பேச்சு.
* பாஜகவுக்கு தங்கள் கவுன்சிலர்கள் தாவி விடுவார்கள் என்ற பயத்தில் ஷிண்டே – சிவசேனா, அவர்களை பதுக்கி வைத்துள்ளது, சிவசேனா (தாக்கரே) சஞ்சய் ராவுத் விமர்சனம்.
தி இந்து:
* நான்கு மாதங்களுக்குள் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: உச்ச நீதிமன்றம். உயர்கல்வியின் “பெருந்திரளாக்கம்” மற்றும் “தனியார் மயமாக்கல்” ஆகியவை மாணவர் சேர்க்கையில் இந்தியாவை உலக அளவில் இரண்டாம் இடத்தில் நிறுத்தி உள்ளன, ஆனால் இந்த அவசரம் மரணங்கள், மன உளைச்சல், நாள்பட்ட காலிப் பணியிடங்கள் மற்றும் சுரண்டல் போன்ற தடயங்களை விட்டுச் சென்றுள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
*நவீன யுகத்தை நோக்கி தமிழ்நாடு சிறப்பாக முன்னேறுகிறது’, “பழமையின் தேவையற்ற சுமை கைவிடப்பட்டதா” என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநரும், ‘இந்தியா அண்ட் ஹர் ஃபியூச்சர்ஸ்’ என்ற நூலின் ஆசிரியருமான கோபாலகிருஷ்ண காந்தி கருத்து.
* கார்த்திக் ராம் மனோகரனுடன் இணைந்து ‘தி கேம்பிரிட்ஜ் கம்பானியன் டு பெரியார்’ நூலைத் தொகுத்த வெங்கடாசலபதி, வள்ளலார் அல்லது தாயுமானவர் போன்ற ஆளுமைகளைப் போலன்றி, ஆழமாக வேரூன்றிய நம்பிக்கைகளை மக்கள் கைவிடுவதற்கு மென்மையான வற்புறுத்தல் முறையை பெரியார் நம்பவில்லை என்று கூறினார். “அவர் அதிர்ச்சி வைத்தியத்தில் நம்பிக்கை கொண்டிருந்தார்,” என்று கூறினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 2023-லும், நீட் முதுகலை தேர்வுக்கு-40 மதிப்பெண்: நீட் முதுகலை 2025 தேர்வுக்கான தகுதி மதிப்பெண், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு பூஜ்ஜிய பெர்சன்டைலாகக் குறைக்கப்பட்டிருப்பது மருத்துவ சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மைனஸ் 40 மதிப்பெண்ணுக்கு சமமானதாகும். இருப்பினும், தகுதி பெற மைனஸ் 40 மதிப்பெண் போதுமானதாக இருப்பது இது முதல் முறையல்ல. 2023-லும் இதேபோல் அனைத்து பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண் பூஜ்ஜிய பெர்சன்டைலாகக் குறைக்கப்பட்டது, அப்போதும் அதற்குச் சமமான மதிப்பெண் மைனஸ் 40 ஆக இருந்தது.
தி டெலிகிராப்:
* வாடிக்கையாளர்களின் வழக்குகளுக்காக தகவல் களைப் பெற வழக்குரைஞர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்று மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பு.
– குடந்தை கருணா
