புதுச்சேரி, ஜன.19- பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் அமைப்பாளர், பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன் 89ஆம் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
முன்னதாக 16-01-2026 முற்பகல் 11.00 மணியளவில் அரியூரில் அமைந்துள்ள இராசன் இல்லத்திற்கு கழகத் தோழர்களுடன் சென்று பிறந்தநாள் விழா வில் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் வே. அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் கி. அறிவழகன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு. தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன் ஆகியோர் பயனாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினர்.
அனைவரையும் அம் மையார் லலிதா இராசன் வரவேற்று மகிழ்ந்தார்கள். இவர்களின் மூத்த மகளும், தந்தை பெரியார் அவர்களால் பெயர் சூட்டப்பட்டவருமான அறிவு கண்ணு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறி சிறப்பித்தார்.
வெளியூர் பயணத்தில் இருக்கும் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ. வீரமணி கைப்பேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
இராசன் அவர்கள் தலைவர் தந்தை பெரியாருடன் சிறுவய தில் பயணித்ததை பெரு மையுடன் நினைவு கூர்ந்தார். தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களை வெகுவாக பாராட்டி மகிழ்ந்தார். முதுமையின் காரணமாக கழக நிகழ்ச்சிகளில் பங்கு பெறாமை குறித்து கவலை தெரிவித்தார். என்றும் இறுதி மூச்சு உள்ளவரை கழக நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருப் பேன் என்று கூறி கண் கலங்கினார். சமீபத்தில் புதுச்சேரி மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் தன்னுடைய பங்களிப்பாக ரூபாய் ஒரு லட்சம் வழங்கினார் என்பது குறிப் பிடத்தக்கது.
