மஞ்சக்குடி, ஜன. 19- 10.01.2026 அன்று மாலை 5.30 மணியளவில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி கடைவீதியில் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.இரவிக்குமார், நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் அ. அறிவுச்சுடர், அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வி.மோகன், ஒன்றிய தலைவர் ந.ஜெயராமன், ஒன்றிய செயலாளர் க.அசோக் ராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீரையன், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தொடக்க உரையாற்றினார்.
திராவிட மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் கழகப் பேச்சாளர் தேவ.நர்மதா சிறப்புரையாற்றினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
மாவட்டத் துணைச் செயலாளர் ம.மனோஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெ. மண்டோதரி, ஒன்றிய துணை தலைவர் சி.அம்பேத்கர், நன்னிலம் ஒன்றிய தலைவர் தன்ராஜ், ஆறுமுகம், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீர.துரைராஜ், ஒன்றிய அமைப்பாளர் க.ராவணன், நெய்குப்பை பாண்டியன், பாக்கியராஜ் பழனிச்சாமி, அஞ்சா நெஞ்சன், செல்வகுமார், பாலகிருஷ்ணன், ரா. சக்கரவர்த்தி, நிரஞ்சன், அஜய்குமார், வீரம்மாள், அமிர்தம் மற்றும் ஏராளமான கழக இளைஞரணி மாணவ கழகம், மகளிரணி தோழர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பிரச்சார வாயிலாக அப்பகுதி இளைஞர்கள் கழகத்தில் மகிழ்ச்சியுடன் இணைந்து கொண்டனர்.
திராவிட மாணவர் கழக ஒன்றிய பொறுப்பாளர் அ.இன்பத்தமிழ் நன்றி கூறினார்.
