குறைந்த இரத்த அழுத்தம் – சிகிச்சை முறை!

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உயர் இரத்த அழுத்தம் பற்றி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் குறைந்த இரத்த அழுத்தம் என்றால் அது பற்றி பலருக்கும் தெரியாது. அதைப் பற்றி சற்று விவரமாகத் தெரிந்து கொள்வோம்.

  1. குறைந்த இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தின் மேல் அளவை Systolic  அழுத்தம் என்றும், கீழ் அளவை Diastolic அழுத்தம் என்றும் கூறுவோம். முதுமையில் ஒருவருக்கு 140 / 90 அளவுக்கு மேல் இருந்தால் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரிந்து கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் 130 / 80க்குள் இருக்க வேண்டும். எந்த வயதானாலும் இரத்த அழுத்தத்தின் மேல் அளவு 120 – 140, கீழ் அளவு 80 – 90 அளவில் தான் இருக்க வேண்டும்.

இரத்த அழுத்தம் மேல் அளவு 90க்கும், கீழ் அளவு 60க்கும் கீழே இருந்தால் அதை குறைந்த இரத்த அழுத்தம் என்பர். இதனால் உடல் உறுப்புகள் அனைத்திலும் பிராண வாயு செல்வது குறைந்துவிடும். இதன் விளைவு :

மயக்கம், நிலை தடுமாறுதல், கண் பார்வை மங்குதல், குமட்டல், பசியின்மை, கீழே விழுதல் போன்றவை ஏற்படும்.

காரணங்கள்

நீர் வறட்சி – வாந்தி, பேதி, இரத்த வாந்தி, ஒவ்வாமை – பூச்சிக் கடி, பென்சிலின், சல்பா மருந்துகள், மருந்துகள் – உயர் இரத்த அழுத்த மாத்திரை, நீர் மாத்திரை, தூக்க மாத்திரை, மன நோய்க்கான மாத்திரை, தாழ்நிலை சர்க்கரை, இதயம் பலவீனப்படுதல், மது, தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்பு அதிகம். உதாரணம் : பக்கவாதம், உதறுவாதம், மறதி நோய், மூட்டுவலி ஆகிய நோய் உள்ளவர்கள்

சிகிச்சை முறை

  • குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மருந்து ஒரு காரணமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அதை குறைக்கவோ அல்லது நிறுத்தவோ வேண்டும்.
  • நீர் வறட்சிக்கு குளுக்கோஸ், சலைய்ன் போன்ற திரவத்தை ஊசி மூலம் செலுத்தினால் குறைந்த இரத்த அழுத்தம் சரியான நிலைக்கு வந்துவிடும்.
  • உணவில் உப்பைச் சற்று அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
  • இதய பலவீனம் மற்றும் நோய் தொற்று ஒரு காரணமாக இருப்பின் அதற்கு தக்க சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  1. உடல் நிலைக்கு ஏற்றவாறு மாறுபடும்
    இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தத்தை படுத்த நிலையிலும், உட்கார்ந்த நிலையிலும் மற்றும் நிற்கும் நிலையிலும் பரிசோதனை செய்வதின் மூலம் குறைந்த இரத்த அழுத்தத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

ஒருவர் உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்து நிற்கும் பொழுது மேல் அளவு இரத்த அழுத்தம் 20 mmHg க்கும், கீழ் அளவு இரத்த அழுத்தம் 10 mmHg அளவிற்கும் குறைந்தால் அவருக்கு உடல்நிலை ஏற்றவாறு இரத்த அழுத்தம் குறைந்தது என்று கூறலாம். இதனால் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட குறைவால் மயக்கம், நிலை தடுமாறுதல், கீழே விழுதல் போன்ற தொல்லைகள் ஏற்படும்.

சிகிச்சை முறை

  • படுத்திருக்கும் போதோ அல்லது உட்கார்ந்து இருக்கும் போதோ எழும்போது மெதுவாக எழவேண்டும்
  • தண்ணீர் அதிகம் பருக வேண்டும்
  • உடல் நிலையில் மாறுபாடு ஏற்படும் போது குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து, உட்கார்ந்து, பின்பு எழுந்து நிற்க வேண்டும்.
  • தொடர்ந்து படுக்கையில் படுத்திருப்பவர்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் வர வாய்ப்பு அதிகமிருப்பதால் முடிந்தளவிற்கு கை கால்களை அடிக்கடி அசைத்து, உடற்பயிற்சி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இயன்முறை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
  1. உணவிற்குப் பின்னர் ஏற்படும்
    குறைந்த இரத்த அழுத்தம்

முதுமைப் பருவத்தில் எந்தவித நோய்கள் இல்லாமல் இருப்பினும் காலை மற்றும் மதிய உணவிற்கு சுமார் 75 நிமிடங்களுக்குப் பின்பு அவர்களுக்கு இரத்த அழுத்தம் சுமார் 20 அளவிற்கு குறைகிறது. (Post prandial hypotension) உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அதற்கு சிகிச்சை எடுத்து வருபவர்களுக்கம் மற்றும் மத்திய நரம்பு மண்டலம் (autonomic nervous system dysfunction) சரியாக செயல்படாதவர்களுக்கும் இத்தொல்லை வர வாய்ப்பு அதிகமுண்டு, உதாரணம் : உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய், நீரிழிவு நோய்.

உணவிற்கு பின்பு இவர்களுக்கு, தூக்கம், மயக்கம், நிலை தடுமாறுதல், கீழே விழுதல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். இதை உறுதி செய்ய உணவிற்கு முன்பும் மற்றும் உணவிற்கு பின்பும் 30 நிமிடம் மற்றும் 60 நிமிடம் கழித்து இரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டும்.

சிகிச்சை முறை

உயர் இரத்த அழுத்தம் மாத்திரையை உணவிற்கு முன்பு சாப்பிடக்கூடாது. தேவைப்பட்டால் இரத்த அழுத்தம் மாத்திரையின் அளவைக் குறைக்கலாம். உணவு உண்டபின் சற்று படுக்க வேண்டும். உணவை குறைந்த அளவில், அடிக்கடி உண்ணுதல் நல்லது. மாவுச் சத்தும், சர்க்கரை சத்தும் நிறைந்த உணவுகளையும், பானங்களையும் தவிர்க்க வேண்டும். உணவு உண்ட பின்பு சற்று தூரம் நடந்தால் சிலருக்கு நல்ல பயன் கிடைக்கும்.

குறைந்த இரத்த அழுத்தம் என்பது அடிக்கடி வரும் தொல்லை அல்ல. ஆனால் அப்படி குறைந்த இரத்த அழுத்தம் ஏற்பட்டால், அதற்கு தக்க சிகிச்சை அளித்து நலமாய் வாழ முடியும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *